பாகிஸ்தான் விமானி இந்தியாவில் விமானம் ஓட்டலாமா? ஃப்ளைதுபாய் சம்பவத்துக்கு பின் எழுந்த முக்கிய கேள்வி

  • டெல்லி: ஃப்ளை துபாய் சம்பவத்திற்கு பிறகு விமான பாதுகாப்பு தொடர்பாகவும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விபத்தை ஏற்படுத்த முயன்ற துணை பைலட் ஓமனை சேர்ந்தவர் என சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் விமானத்தை இயக்க முடியுமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    கடந்த செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட், விமானத்தை விபத்திற்குள்ளாக முயன்றிருக்கிறார். இதற்காக அவர் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாக கூறப்படுகிறது. கேப்டனுக்கு கத்திக்குத்து ஏற்பட்ட நிலையில், விமானம் சுமார் 14,000 அடி வேகமாக கீழிறங்கியது.

    Advertisement

    கேள்வி

    பின்னர் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் துணை விமானியை கட்டுப்படுத்தினர். நல்வாய்ப்பாக விமானத்தில் பணியில் இல்லாத இரண்டு ஃப்ளைதுபாய் விமானிகள் இருந்த நிலையில், அவர்கள் உதவியுடன் விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு, இஸ்ரேல் செல்லும் விமானங்களில் பணியாற்றும் விமானிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

    இஸ்ரேல்- அமீரக ஒப்பந்தம்

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஃப்ளைதுபாய் நிறுவனம் அமீரகம் இஸ்ரேல் இடையிலான விமான போக்குவரத்து ஒப்பந்த விதிகளை பின்பற்றியதா என்பதை விசாரிக்க இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால் இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்களை இயக்கும் விமானிகள், இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஓமனுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லை. இதனால் ஓமன் நாட்டை சேர்ந்த விமானி ஒரு அமீரக விமான நிறுவனத்தில் வேலை செய்தாலும் கூட அவரால் இஸ்ரேல் செல்லும் குறிப்பிட்ட விமானத்தை இயக்க முடியாது. அதாவது, ஓமனை சேர்ந்தவர் குறிப்பிட்ட அமீரக விமானத்தை மற்ற நாடுகளுக்கு செல்லும்போது இயக்க முடியும். ஆனால், அந்த விமானம் இஸ்ரேல் செல்லும் ரூட்டில் இயக்கப்பட்டால் அவர் இதை இயக்கக்கூடாது. இதுவே இப்போது விவாதமாகியிருக்கிறது.

    இந்தியா பாகிஸ்தான்

    இந்த நேரத்தில் நமக்கு இன்னொரு கேள்வியும் வருகிறது. அதாவது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரால் இந்தியாவில் விமானத்தை இயக்க முடியுமா என்பதே அந்த கேள்வி! பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள், பாகிஸ்தான் குத்தகைக்கு எடுத்த விமானங்கள் என எதற்குமே இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி கிடையாது. அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட விமானம் இந்தியாவுக்குள் வர முடியாது.

    Advertisement

    ஆனால் விமானி மட்டும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றால்..? தற்போதைய சூழலில் இதுதான் முக்கியமானது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், உதாரணமாக அமீரகம் அல்லது ஐரோப்பிய விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றுகிறார் என்று வைத்து கொள்வோம். அந்த குறிப்பிட்ட விமான நிறுவனம் அதன் விமானங்களை இந்தியாவில் இயக்க அனுமதி பெற்றுள்ளது.

    முக்கியமான கேள்வி

    அந்த விமானம் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானம் இல்லை. அதை பாகிஸ்தான் நிறுவனம் இயக்கவும் இல்லை. எனவே, இத்தகைய சூழலில், இந்தியாவின் தற்போதைய விதிகளின்படி, விமானி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் அந்த விமானம் இந்திய வான்வெளிக்குள் வருவதற்கு தடை இருப்பதாக கூற முடியாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    ஆனால் அதனால் அந்த விமானி தானாகவே இந்தியாவுக்குள் வரலாம் என்று அர்த்தமில்லை. விசா, குடியேற்ற அனுமதி, பாதுகாப்பு சோதனை, வெளிநாட்டு விமானி தொடர்பான விதிமுறைகள் போன்றவை தனியாக பொருந்தும். குறிப்பாக, 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு இந்தியா தனியான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளையும் விதித்தது. எனவே, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வேறு நாடுகளை சேர்ந்த விமானங்களை இந்தியாவில் இயக்கலாம் என்றாலும் அதற்கான அனுமதி ஈஸியாக கிடைத்துவிடாது.

    கொஞ்சம் கஷ்டம் தான்

    சுருக்கமாக சொன்னால், இந்தியாவின் விமான தடை என்பது விமான நிறுவனத்தை மையமாக கொண்டது. விமானி எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை பொறுத்து இல்லை. ஆனால் இந்தியாவுக்குள் விமானியாக நுழைந்து பணியாற்றுவதற்கு விசா, குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் அனுமதி உள்ளிட்ட தனிப்பட்ட விதிமுறைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.

    English Summary

    Flydubai incident has raised questions about pilot nationality and aviation restrictions(இந்திய விமானத்தை பாகிஸ்தான் விமானி இயக்கலமா): Can a Pakistan Pilot Fly an Aircraft in India.