அம்பானி தான் இந்தியாவின் ரியல் பாஸா? ‘ஸ்டார்லிங்க்' லைசென்ஸ் கிடைக்காதத ஏன்? எலான் மஸ்க் கேள்வி

  • டெல்லி: 'ஸ்டார்லிங்க் இணையதளம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் லைசென்ஸ் பெற்று சேவை வழங்கி வருகிறது. ஆனால் அனைத்து சட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் இணங்கியும் கூட 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்தும் இன்னும் லைசென்ஸ் கிடைக்கவில்லை. இதனால் அம்பானி தான் இந்தியாவின் ரியல் பாஸா?'' என்று எலான் மஸ்க் கேள்வி கேட்டு இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அதில் ஒன்று தான் 'ஸ்டார்லிங்'. செயற்கைகோள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    எலான் மஸ்க் தனது ‛ஸ்பேஸ்எக்ஸ்'என்ற விண்வெளி நிறுவனத்தின் மூலமாக ‛ஸ்டார்லிங்' என்ற பெயரில் செயற்கைகோள் மூலமாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறார். தற்போது 'ஸ்டார்லிங்' சேவை ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிலும் 'ஸ்டார்லிங்' தனது சேவையை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில் 'ஸ்டார்லிங்' சேவைக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஸ்டார்லிங்' சேவை இன்னும் நம் நாட்டில் அறிமுகம் ஆகவில்லை.

    இந்நிலையில் தான் இந்தியாவில் இன்னும் 'ஸ்டார்லிங்' சேவைக்கு அனுமதி கிடைக்காததற்கு அம்பானி தான் காரணம் என்பது போல் எலான் மஸ்க் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் மாலை 6.55 மணிக்கு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

    Advertisement

    '' 'ஸ்டார்லிங்க்' 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அரசின் அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட கடந்த ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இன்னும் ஏன் உரிமம் வழங்கப்படவில்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

    English Summary

    Elon Musk says that, ‘‘Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?''.