சிந்து நதி ஒப்பந்தம்.. சர்வதேச நடுவர்மன்ற தீர்ப்பை நிராகரித்த இந்தியா! பல்ப் வாங்கும் பாகிஸ்தான்

  • டெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்ததற்கு எதிராக நெதர்லாந்தின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்பாயத்தை பாகிஸ்தான் நாடியது. சர்வதேச நடுவர் மன்றமும் ஒப்பந்ததை நிறுத்திவைக்க கூடாது எனக் கூறிய நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகார வரம்பே நடுவர் மன்றத்திற்கு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

    Advertisement

    ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடரும்

    சிந்து நதி பாகிஸ்தானுக்கு செல்வதை நிறுத்திவிட்டால் தங்கள் நாட்டின் பெரும்பகுதி பாதிக்கப்படும் என கதறிய பாகிஸ்தான், உடனடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் மன்றத்தை நாடியது. இந்த விவகாரத்தை விசாரித்த நடுவர் மன்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதையோ, ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது. ஒப்பந்தப்படி இந்தியா செயல்பட வேண்டும்.

    காஷ்மீரில் இந்தியா கட்டி வரும் நீர் மின் திட்டங்களின் கட்டுமான பணிகளையும் குறிப்பிட்ட வரம்புக்குள் வைத்து இருக்க வேண்டும்' எனக் கூறியிருந்தது. ஆனால் சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்பை நிராகரித்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடரும். ஹேக்கில் உள்ள நடுவர் மனறத்திற்கு இந்தியாவின் இறையாண்மை விவகாரங்களில் தலையிட எந்த அதிகார வரம்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

    Advertisement

    திட்டவட்டமாக நிராகரிக்கிறது

    ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உலக வங்கியால் இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. எனவே, இந்த நடுவர் மன்றம் வழங்கியதாகக் கூறப்படும் தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு இதற்கு முன்பு வெளியிட்ட அனைத்து உத்தரவுகளையும் இந்தியா உறுதியாக நிராகரித்ததைப் போலவே, இந்தத் தீர்ப்பையும் நிராகரிக்கிறது. என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சிந்து நதி ஒப்பந்தம்

    பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை நிறுத்தாதவரை அந்த நாட்டுக்கு நீரை அனுப்ப முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. 1960-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 1960-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி, சிந்து நதி அமைப்பில் இருக்கக் கூடிய ஆறு நதிகளும் இருநாடுகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டன.

    Advertisement

    கிழக்கு நதிகளான சட்லெஜ்ட், பியாஸ் ரவி ஆகிய நதிகளின் முழுமையாக இந்தியாவுக்கும், மேற்கு நதிகளான ஜீலம் செனாப், சிந்து இவற்றின் நீர் பெரும் அளவு பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு துணை போகும் பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக இந்த சிது நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.

    சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு போகாவிட்டால் அந்த நாட்டின் விவசாயம், பொருளாதாரம் பெரிய அடி வாங்கும் என்பதால், கதறும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் மன்றத்திற்கு எடுத்து சென்றது. ஆனால் நடுவர் மன்றம் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு ஆறுதல் கொடுப்பதாக இருந்த நிலையில், இந்தியா அதனை ஏற்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து இருப்பது பாகிஸ்தானுக்கு இந்த விவாகரத்தில் மீண்டும் மூக்கு உடைப்பட்டுள்ளது.

    English Summary

    Indus Waters Treaty: Pakistan approached the international arbitration tribunal in The Hague after India announced the suspension of the Indus Waters Treaty. While the tribunal ruled against suspending the treaty, the Indian Ministry of External Affairs has rejected this stance, categorically stating that the tribunal lacks jurisdiction over the matter.