விடாப்பிடியாக நிற்கும் இந்தியா கூட்டணி! விட்டுக்கொடுக்காத மத்திய அரசு! டெல்லியில் நீடிக்கும் பதற்றம்

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் இன்று 3வது நாளாக போராட்டம் நீடித்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருந்த நிலையில், இன்றும் ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    போராட்டத்தில் பங்கேற்றிருந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது, தங்களை தாக்கியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

    Advertisement

    இப்படி இருக்கையில் தற்போது 3வது நாளாக போராட்டம் தொடங்கியிருக்கிறது. இன்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் மொத்த டெல்லியும் மீண்டும் பதற்றமடைந்திருக்கிறது.

    English Summary

    The protest against Chief Election Commissioner Gyanesh Kumar continued for the 3rd day in Delhi today. It is said that even today Rahul Gandhi will participate in the protest even though the police forcefully arrested the Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, who participated in the protest for the last 2 days.