தருமபுரி: மொரப்பூரில் தனியார் பள்ளியில் தவறை சுட்டிக்காட்டிய அனைவரையும் விட்டுவிட்டு ஒரு மாணவனை மட்டும் ஆசிரியர் தாக்கியதில் அந்த மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள மொரப்பூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மொரப்பூர் அண்ணல் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
கணித ஆசிரியர் மதிவாணன் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, கரும்பலகையில் தவறாக எழுதியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அந்த மாணவன் மற்றும் சக மாணவர்கள், "சார், இது தவறாக உள்ளது" என சுட்டிக் காட்டியுள்ளனர் இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் மதிவாணன், சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவனை அழைத்து கன்னத்திலும், காதிலும் சேர்த்து பலமாக அறைந்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன், தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் மாணவனை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் மாணவனின் காது ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் காது ஜவ்வு கிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை விதிகளின்படி, மாணவர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டிக்கக் கூடாது என கடந்த 2019-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act 2009) பிரிவு 17-ன் படி, எந்தவொரு குழந்தையையும் உடல் ரீதியாக தண்டிப்பதும், மனதளவில் துன்புறுத்துவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்த உத்தரவிட்டால், BNS பிரிவு 115(2) - திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல் BNS பிரிவு 118(1) - கடுமையான காயம் ஏற்படுத்துதல் (காது ஜவ்வு கிழிதல் Grievous Hurt ஆக கருதப்படும்) இளைஞர் நீதிச் சட்டம் (Juvenile Justice Act) பிரிவு 75 - குழந்தையை துன்புறுத்துதல் - 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் RTE சட்டம் பிரிவு 17-ன் கீழ் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் வழிவகை உள்ளது. இச்சம்பவம் குறித்து பெற்றோர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆசிரியர் தவறுதலாக விடை அளித்ததால் அனைவரும் தவறை சுட்டிக்காட்டினோம். அவற்றில் என்னை மட்டும் கூப்பிட்டு அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் கடுமையாக அடித்தார் என்றும் அவர் அடித்ததில் காது வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதில் மாணவனின் காதில் இருந்து ரத்தம் வந்துள்ளது.பள்ளிக் கல்வித்துறை விதி என்ன சொல்கிறது?
மீறினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.