திருவண்ணாமலையில் சோகம்.. ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுமிகள் உள்பட 5 பேர் பலி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அரசு காப்பகத்தில் தங்கி இருந்த மாணவிகள் 4 பேர் உள்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காப்பக ஊழியர் மற்றும் மாணவிகள் 4 பேரும் குளிப்பதற்காக அருகே உள்ள சமுத்திரம் ஏரிக்கு சென்ற போது இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. 5 பேர் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் ஆணாய் பிறந்தான் கிராமத்தில் சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு என்ற அரசு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர்.

Tiruvannamalai 5 people including 4 young girls die after going to bathe in a lake What happened

இந்த அரசு காப்பகத்திற்கு பின்புறம் சமுத்திரம் ஏரி உள்ளது. திருவண்ணாமலையில் பெய்த மழையினால் இந்த ஏரியில் தற்போது நீர் நிரம்பி உள்ளது. தீபாவளி பண்டிகை முடிவற்ற நிலையில் இன்று நண்பகல் அரசு காப்பகத்தில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் ஏரிக்கு சென்றுள்ளனர் அப்பொழுது ஒரு சில சிறுமிகள் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர்.

விஜயலட்சுமி(16), அள்ளி (14), பூமிகா(13, வள்ளியம்மாள் (16) ஆகிய நான்கு சிறுமிகள் திடீரென தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் ஒருவர் பின் ஒருவராக மூழ்கினர். இதனைப் பார்த்து பயந்துபோன காப்பாக ஊழியர் தேன்மொழி அவர்களை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கி தேன்மொழியும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து வெளியில் நின்ற சிறுமிகள் உடனடியாக ஓடிப்போய் அப்பகுதியினரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படை வீரர்களுடன் வந்த போலீசார் ஏரியில் மூழ்கிய 5 பேரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் உள்பட 5 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+