நாங்க இருக்கோம்.. சவுதி அரேபியாவிற்கு படைகளை அனுப்ப ரெடியான எகிப்து.. ஹவுதிகளுக்கு புதுசிக்கல்

  • துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்றும் வகையில் தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து தயாராகி வருகிறது. இதுதொடர்பாக முதற்கட்ட ஆலோசனை முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் எகிப்து படை வீரர்கள் சவுதி அரேபியாவில் தரையிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், சவுதி அரேபியாவுடன் மோதி வருகிறது. ஹவுதிகள் தற்போது சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய எகிப்து முன்வந்துள்ளது. எகிப்து நாட்டின் படை வீரர்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்ப அந்த நாடு தயாராகி வருகிறது.

    இதனை எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹி அல்-சிசி உறுதி செய்துள்ளார். எகிப்தில் ராணுவ பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ''சவுதி அரேபியாவை பாதுகாக்கவும், அதன் இறையாண்மையைக் காக்கவும் அந்த நாடு கோரும் எந்தவொரு உதவியையும் எகிப்து செய்யும். சவுதி அரேபியாவை பாதுகாக்க எங்களின் ராணுவத்தையும் அனுப்புவேன்.

    இதற்காக நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. எங்களின் ராணுவம் தற்காப்பு நடவடிக்கைக்காக தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். சவுதி அரேபியா எங்களிடம் இதுவரை உதவி கோரவில்லை. உதவி கோரியவுடன் ராணுவ வீரர்கள் சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்'' என்றார்.

    Advertisement

    எகிப்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி அந்த நாடு நட்பு நாட்டின் பாதுகாப்பிற்காக படைகளை அனுப்பும்போது முதலில் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு நாடாளுமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் எகிப்து தனது ராணுவத்தை பிற நாடுகளுக்கு அனுப்பலாம்.

    இந்த விஷயத்தில் அதிபர் மட்டுமே தனித்து செயல்பட முடியாது. இதனால் தான் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹி அல்-சிசி கடந்த 18 ம் தேதி அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டினார். அப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான பதற்றம் மற்றும் சவுதி அரேபியா மீதான ஹவுதிகளின் தாக்குதல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    Advertisement

    அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவின் பாதுகாப்பு உறுதி செய்யவும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களை பாதுகாக்க தேவையான உதவிகளை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து தான் சவுதி அரேபியாவிற்கு ராணுவத்தை அனுப்புவது பற்றி அந்த நாட்டின் நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார் அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் அல் -சிசி. இந்த அனுமதி கிடைத்தவுடன் சவுதி அரேபியா உதவி கேட்டால் உடனடியாக எகிப்து படை வீரர்கள் அங்கு சென்று ஹவுதிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான பணியை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Egypt is preparing to deploy its troops to help protect Saudi Arabia from attacks by the Houthis. Reports indicate that initial consultations on this matter have concluded, and Egyptian forces could soon arrive in Saudi Arabia.