பாகிஸ்தானியர்கள் யாருக்கும் விசா தர முடியாது.. சைலண்டாக அமீரகம் எடுத்த முடிவு.. என்ன காரணம்?

  • துபாய்: உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், வணிகர்களை ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக அமீரகம் இருக்கிறது. இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு விசா வழங்குவதையே ஒட்டுமொத்தமாக அமீரகம் நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருந்து தொழிலதிபர்களை ஈர்க்கும் நாடாக அமீரகம் இருந்து வருகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் இருந்தும் பலரும் அமீரகம் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

    Advertisement

    விசா இல்லை

    இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு விசா வழங்குவதை பாகிஸ்தான் சைலண்டாக நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் ஏற்றுமதி தொடங்கி சர்வதேச வர்த்தகம், ஆலோசனை கூட்டங்கள் என அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியர்கள் புலம்புகிறார்கள்.

    இருப்பினும், இதை அமீரக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அனைத்து வகை விசா விண்ணப்பங்களும் வழக்கம் போலவே பரிசீலிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    வல்லுநர்கள் சொல்வது என்ன!

    இது தொடர்பாக பாகிஸ்தான் வர்த்தக மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பின் முன்னாள் பொது செயலாளர் ஷாஹித் அன்வர் கூறுகையில், "இப்போது வரை அதிகாரப்பூர்வமாக விசா தடை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் தொழிலதிபர்கள் விசா கோரி விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது" என்றார்.

    Advertisement

    ராவல்பிண்டி வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் உஸ்மான் ஷௌகத் இது தொடர்பாக கூறுகையில், "பல ஆண்டுகளாக அமீரகத்தோடு வர்த்தகம் செய்து வருவோருக்கும் விசா கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன் துபாய், ஷார்ஜா, அபுதாபியில் சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கும் கூட விசா கிடைக்கவில்லை. இதனால் முக்கியமான பல ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாத சூழலே இருக்கிறது" என்றார்.

    மொத்தமாக மறுப்பு?

    பிஸ்னஸ் விசா என்று இல்லை.. எந்தவொரு விசாவும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லையாம். இதனால் ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் கட்டுப்பாடுகளுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக அமீரகம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இதனால் தொழில் துறையினர் குழப்பத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    வளைகுடாவில் பல்வேறு நாடுகள் உள்ள நிலையில், அதில் சில வளைகுடா நாடுகள் பாகிஸ்தான் குடிமக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு கடுமை காட்டி வருவதாக பாகிஸ்தானை நாட்டை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

    உறவில் விரிசல்?

    கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தது. எப்போதும் அமீரகத்திற்கும் சவுதிக்கும் ஆகவே ஆகாது. சவுதியுடன் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தமே அமீரகம்- பாகிஸ்தான் இடையே விரிசலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை உடனடியாக திருப்பி செலுத்துமாறு அமீரகம் வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    அதேபோல அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் செல்லும் பாகிஸ்தானியர்கள் பலரும் அங்கு யாசகம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம். பொது இடத்தில் இதுபோல யாசகம் கேட்கும் போக்கு அதிகரித்து வருவது, அமீரக அதிகாரிகளுக்கு சிக்கலை தருவதாக இருக்கிறது. பாகிஸ்தானியர்களுக்கு விசா நடைமுறையில் கெடுபிடி காட்ட இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

    English Summary

    Pakistani business leaders claim the UAE has silently stopped issuing business visas(பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசாவை மறுக்கும் அமீரகம்): UAE Visa for pakistan latest news in tamil.