நள்ளிரவு முதல் காலை வரை.. திபெத் - லடாக் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: இமயமலையையொட்டிய இந்தியாவின் லடாக், திபெத், மியான்மர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளன.

அதன்படி திபெத்தின் நேற்று இரவு 11.34 மணிக்கு பூமிக்கடியில் 90 கிலோமீட்டர் ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

earthquake leh myanmar

அதனைதொடர்ந்து நம் நாட்டின் லடாக்கில் உள்ள லே பகுதியில் நேற்று நள்ளிரவு 11.25 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

மேலும் இன்று காலையில் மியான்மரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் பூமிக்கடியில் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

இந்த 3 இடங்களிலும் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் கூட அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 3 இடங்களிலும் சமீபகாலமாக நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+