₹1000 தாமதம்! ஸ்டாலின் கேட்டார்.. ஜவாஹிருல்லா கொந்தளித்தார்.. விஜய் அரசுக்கு எதிர்ப்பு புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சிக்கு வந்த விஜய் அரசு, தற்போது அவற்றை நிறைவேற்றாமல் அமைதி காப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.. குறிப்பாக, மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற பிரதான வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.. மக்கள் நலத் திட்டங்களில் அரசு காட்டும் இந்த அலட்சியம் அரசியல் நேர்மையற்ற செயல் என்று பேராசிரியர் காட்டமாக விமர்சித்துள்ளதார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக, மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் வழங்கி வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது.

Jawahirullah

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000

ஏனென்றால் இந்த நிதியை ரூ 2000 ஆக உயர்த்துவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. அது போல் அதிமுகவும் ரூ 2000 தருவதாக தெரிவித்திருந்தது. தவெக விஜய் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விரைவில் நிதி நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்து மகளிர் உரிமை தொகை 2500 ரூபாயை வழங்கும் என்ற தகவல் வெளியானது..

இதுகுறித்து நிதித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய் அதிகாரப்பூர்மவான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

2500 உரிமைத்தொகை எங்கே

மே 2026 மாதத்திற்கான ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? இவ்வாறு ஸ்டாலின் காட்டமாக கேட்டுள்ளார்.

பெண்களுக்கு தந்த வாக்குறுதி எங்கே

இந்நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற தவறி மக்களை ஏமாற்றும் விஜய் அரசின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கின்றது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் காலத்தில் தமிழக மக்களிடம் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசு, தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டும் சுணக்கம் ஏமாற்றம் அளிக்கின்றது.

குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் அறிவித்து வாக்குகளை பெற்ற அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எந்த தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவாஹிருல்லா தமிழக அரசுக்கு கேள்வி

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள், மருத்துவச் செலவுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. தேர்தல் மேடைகளில் "மாதம் ரூ.2,500" என்று உறுதி மொழி அளித்தவர்கள், இன்று அந்த வாக்குறுதியை மறந்து பேசுவது அரசியல் நேர்மையற்ற செயலாகும்.

மாதம் ரூ.2,500 வழங்குவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த அரசு, திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தம்மட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் நேற்று உறுதி அளித்து விட்டு மகளிர் மெற்று வந்த மாதம் ரூ.1,000 தொகையை? கூட வழங்க மறுப்பது எந்த வகையிலான நிர்வாகம்?

பெண்களின் பொருளாதார முன்னேற்றம், குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றோடு நேரடியாக தொடர்புடைய இந்த திட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது. பெண்களை தேர்தல் கால வாக்குறுதிகளின் மூலம் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவர்களின் நம்பிக்கையை சிதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கறாராக கூறியிருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+