பீகார் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு யார் காரணம்?

Subscribe to Oneindia Tamil

பீகார்: பீகார் தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பீகாரில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. களப்பணி, கூட்டணியைக் கட்சியை அரவணைத்துச் செல்வதில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் நன்றாக இல்லாதது போன்ற காரணங்களே காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கான காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் பெருமாள் மணி தெரிவித்துள்ளார்.

பீகாரில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 89 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆா்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி வெறும் 34 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

bihar-elections-who-is-responsible-for-the-defeat-of-the-congress-alliance

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கையிலெடுத்த ராகுல் காந்தி, வாக்காளர் உரிமை யாத்திரையும் நடத்தினார். வாக்குத்திருட்டு நடந்ததாகக் கூறி தரவுகளை வெளியிட்டு அதிச்சியைக் கொடுத்திருந்தார். ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் தொகுதிப் பங்கீட்டிலும் கடுமை காட்டி, மாநிலத்தில் 50 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டது.

ஆனால், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. காங்கிரஸ் கூட்டணியின் இந்த தோல்விக்கான காரணம், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பெருமாள் மணி ஒன் இந்தியா தமிழுக்கு விரிவாகப் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், "பீகார் தேர்தலை நான் இரண்டாகப் பார்க்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலை எவ்வளவு நேர்த்தியாக கையாண்டது, இந்தியா கூட்டணி இந்தத் தேர்தலை எப்படி கையாண்டது என்ற வேறுபாட்டை மட்டுமே நான் பார்க்கிறேன். பீகாரில் 20 ஆண்டுகளாக நிதிஷ் ஜேபி மாணவர்களிலேயே ஒழுங்கமைக்கப்பட்ட சிந்தனையைக் கொண்டவர். பல நிகழ்வுகளில் திரைக்குப் பின்னால் இருந்தவர். தெளிவாக எந்த செயலையும் செய்யக் கூடியவர். ரயில்வே துறையில் அவர் செய்த பணிகள் எல்லாம் மிகப்பெரிய பணி. 20 வருடமாக அவர் தொடர்ந்து இருப்பதில் மக்களுக்கு சிறிய அலுப்பு உள்ளது.

இளம் தலைவர் தேஜஸ்வி மக்களிடையே நம்பிக்கையை கொடுத்திருந்தார். ஆனால், அந்த வேகம் கூட்டணிக் கட்சிகளால் மாறியது. காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டை பெரிய பிரச்சனையாக பேசியது. இதனால், பீகாரின் ஆதாரமான பிரச்சனைகள் பெரிதாக தேர்தல் நேரத்தில் பேசப்படவே இல்லை. இதனால், தேசியப் பிரச்சனைகள் மக்களிடம் எடுபடவில்லை.

மிக நேர்த்தியாக நடந்திருக்க வேண்டிய தேர்தல் இது. ராகுல் காந்தியின் செயல்பாடுகளும் மக்களிடம் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், தேர்தல் வேலைகள், களப்பணி, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்வதில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அவ்வளவு நன்றாக இல்லை." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+