ரூ. 28,17,41,29,408.. வக்கீலுக்கு கூரையை பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்! ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வக்கீல் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. அவருக்கு ஒரே நாளில் ரூ.28,17,41,29,408 மதிப்பிலான பங்குகள் அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் அடுத்த சில நொடிகளில் இன்னொரு ஒரு ட்விஸ்டும் நடந்துள்ளது.. யார் அந்த நபர்.. அவருக்கு வந்த ட்விஸ்ட் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நம் எல்லாருக்கும் எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். ஒரே ஒரு லக் அடித்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதால் அந்த ஒரு நொடி அதிர்ஷ்டத்திற்காகவே நாம் காத்திருப்போம். அப்படி ஆவலாகக் காத்திருந்த ஒருவருக்கு தான் இங்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது.

டிஜிட்டல் முறை
அதாவது இந்தக் காலத்தில் எல்லாப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையிலேயே நடக்கிறது. டிஜிட்டல் முறையில் நடப்பதால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறைகிறது. தேவையான பரிவர்த்தனைகளையும் ஈஸியாக செய்ய முடிகிறது. ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் கூட சில நேரம் தவறுகள் நடந்து விடுகின்றன.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாம்னோத் நகரத்தில் தான் இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உள்ளூர் நோட்டரி வழக்கறிஞர் வங்கி செய்த தவறால் சில நிமிடங்களுக்கு ஒருவர் கோடீஸ்வரர் ஆனார்.
யார் அந்த நபர்
அந்த நபர் வினோத் டோங்லே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரபல நோட்டரி மற்றும் தனியார் பள்ளி உரிமையாளரான அவர், தனது டீமேட் கணக்கைச் சரிபார்த்தபோது அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் இருக்கிறார். ஏனென்றால் அவரது வங்கிக் கணக்கில் ரூ.2,817 கோடி இருப்பதாக அதில் இருந்துள்ளது.
என்ன நடந்தது!
அவரது டிமாட் கணக்கில் ஹர்ஷில் அக்ரோ லிமிடெட் நிறுவனத்தின் 1,312 பங்குகள் இருந்துள்ளன. அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ. 2.14 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அவரது மொத்தப் பங்கு மதிப்பு ரூ.28,17,41,29,408 ஆக உயர்ந்திருந்தது. இதை டோங்லே வால் நம்ப முடியவில்லை. நமது கண்ணில் தான் ஏதோ பிரச்சினை என நினைத்துக் கொண்டு.. திரும்பத் திரும்ப செக் செய்துள்ளார். ஆனால், நிஜமாகவே அவரது கணக்கில் பல கோடி மதிப்பிலான பங்குகள் இருந்துள்ளன.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனது தலைவிதி ஒரே இரவில் மாறிவிட்டது என்று சில நிமிடங்கள் நினைத்தேன். உலகின் அனைத்து லாட்டரிகளையும் வென்றது போல் உணர்ந்தேன்" என்றார். இருப்பினும், அவரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தவறை கண்டறிந்த சம்பந்தப்பட்ட அமைப்பு, அதைத் திருத்தியுள்ளது. இதையடுத்து பங்குகளின் விலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
கரைந்து போனது
இப்படித் தான் டோங்லேவின் கோடீஸ்வரர் அந்தஸ்து டிஜிட்டல் உலகில் கரைந்து போனது. இந்தச் சம்பவத்தால் அவர் பாதிக்கப்படவெல்லாம் இல்லை. இதை அவர் ஜாலியாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "இது ஒருமுறை மட்டுமே நடக்கும் டிஜிட்டல் மாயாஜாலத் தருணம்.. இதனால் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை" என்று அவர் கூறினார்..
இந்த காலத்தில் பங்குகள் அனைத்துமே டிமேட் எனப்படும் டிஜிட்டல் முறையிலேயே சேமிக்கப்படுகிறது. பாதுகாப்பை உறுதி செய்யவே இப்படி டிமேட் முறையில் பங்குகள் சேமிக்கப்படுகிறது. ஆனால், அந்த முறையிலேயே இப்போது குளறுபடி நடந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications