லிஸ்ட் போட்டு தூக்கும் ஈரான்.. மொத்த எண்ணெய், எரிவாயு கிணறுகள் காலி.. வளைகுடா முழுவதும் டார்கெட்!

Subscribe to Oneindia Tamil

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான சிறிய குழு வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இந்த திடீர் பயணம் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதற்காக ஹார்முஸ் அனைத்து கப்பல்களுக்கும் திறக்கப்படுவதாக அப்பாஸ் அராக்சி கடந்த முறை அறிவித்தார். இதை ஈரான் நாட்டின் IRGC படை கடுமையாக மறுத்தது.

இந்த நிலையில் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பாகிஸ்தானுக்கு எந்தளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்பது சந்தேகம் தான். வெள்ளிக்கிழமை அராக்சி பாகிஸ்தான் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பல உரையாடல்களை நடத்திய பின்னர் பயணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Iran trump USA Iran Target List Gulf Oil Iran US Talks Pakistan Abbas Araghchi Islamabad Strait of Hormuz Crisis Gulf Energy Facilities Threat Iran target list energy facilities RasGas Ras Laffan Qatar Das Zirku Islands UAE Abqaiq Safaniya Khurais Saudi Burgan oil field Kuwait Iran threatens Gulf oil installations Abbas Araghchi Pakistan visit US Iran talks resumption Iran diplomacy and threats Gulf energy infrastructure attack list Strait of Hormuz war risk Iran State TV target list Abbas Araghchi Islamabad Iran Saudi Arabia oil threat Middle East energy crisis 2026

ஈரான் போட்ட லிஸ்ட்

அப்பாஸ் அராக்சி-யின் இந்த முயற்சிக்கு இடையே ஈரான் அரசு தொலைக்காட்சியில் அமெரிக்கா - இஸ்ரேல் உடன் போர் மீண்டும் தொடங்கினால் தாக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களின் பட்டியல் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஈரான் அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.

டிவிட்டரில் இந்த பதிவு சுமார் 36000 பேர் பார்த்துள்ளனர். இந்த பட்டியலில் பல்வேறு வளைகுடா நாடுகளின் முக்கியமான எண்ணெய் உள்கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

கத்தார்: ராஸ்காஸ் மற்றும் ராஸ் லாஃபான் எல்என்ஜி வசதிகள்
ஐக்கிய அரபு அமீரகம்: தாஸ் மற்றும் ஜிர்கு தீவுகள் (கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள்)
சவுதி அரேபியா: அப்கைக், சஃபானியா மற்றும் குரைஸ் வசதிகள் (சவுதியின் மிக முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகள்)
குவைத்: புர்கான் எண்ணெய் வயல் (உலகின் மிகப் பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்று)

போர் மீண்டும் தொடங்கும் பட்சத்தில் வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதை இப்பட்டியலின் மூலம் தெளிவாகக் காட்டுகிறது.

ஈரானின் இருமுனை உத்தியா?

ஒருபுறம் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுக்கும் ஈரான், மறுபுறம் போர் தொடர்ந்தால் வலுவான தாக்குதல்களை நடத்த தயாராக இருப்பதாக சிக்னலை அளித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தை எவ்வளவு வெற்றி பெறும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+