என்னடா நடக்குது இங்க.. நான் வந்துட்டேன்டா! செத்து செத்து விளையாடும் கிம் ஜாங்! கிளப்பி விட்டது யார்?

  • பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதாகவும், சீனாவில் மேல் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததாக சமீபத்தில் வதந்தி பரவியது. இதற்கிடையே கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி உலக அளவில் எழுந்திருக்கும் நிலையில் இந்த வதந்தியை பரப்பி விட்டது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    Advertisement

    உலகில் இருக்கும் மர்மமான நாடுகளில் முதன்மையானது வடகொரியா. அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர் அந்நாட்டின் முன்னாள் இந்நாள் ஆட்சியாளர்களான கிம் பரம்பரையினர்.

    Advertisement

    கிம் பரம்பரையில் மூன்றாவது வாரிசான கிம் ஜாங் உன் தற்போது அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். இதற்கிடையே கிம் ஜாங் உன்னுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும், வடகொரியாவில் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாததால் அவர் சீனாவின்ப் பெய்ஜிங் சென்றதாக வதந்தி பரவியது.

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சிகிச்சை பலனளிக்காததால் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகவும் அவரது உடல் ரகசியமாக வடகொரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வதந்தி பரவியது. மேலும் வட கொரியாவில் கிம் ஜான் உன்னின் சகோதரி ஆட்சியை கைப்பற்றி விட்டதாகவும், அவருக்கு உதவ சீனா 9000 ராணுவ வீரர்களை அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    Advertisement

    இந்த நிலையில் கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதாகவும் தனது மகள் கின் ஜூ ஏ உடன் கண்காட்சி ஒன்றை பார்வையிடும் புகைப்படங்களை வடகொரியாவின் அரசு ஊடகமான 'ரோடோங் சின்முன்' வெளியிட்டது. அதற்கு முன்னதாக 'ரோடோங் சின்முன்' உயிரிழந்து விட்டதாக சீனாவின் தடை செய்யப்பட்ட சீன ஜனநாயக கட்சியின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் வான் ஜுன் ஷி என்பவர் தான் பரப்பி இருந்தார். ஆனால் அதற்கு அவர் எந்தவித ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

    அதே நேரத்தில் கிம் ஜாங் உன் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. உன் உயிரிழந்ததாக வதந்தி பரவுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பலமுறை இதேபோல அவர் செத்து செத்து உயிருடன் வந்திருக்கிறார்.

    Advertisement

    ஏற்கனவே உலகிலேயே மிகவும் ரகசியமான நாடுகளில் ஒன்றாக வடகொரியா உள்ளது. அங்கு என்ன நடக்கிறது? அதிபர் எப்படியிருக்கிறார்? நாட்டின் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பது குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு உடனடியாகக் தெரிவதில்லை. இதனால், வடகொரியத் தலைவர்களின் உடல்நிலை குறித்து சிறிய தகவல் வெளியானால்கூட அது பெரிய விவாதமாக மாறிவிடும். அங்கு என்ன நடக்கிறது என உறுதிப்படுத்துவது கடினமாக இருப்பதால், ஆதாரமற்ற வதந்திகளும் வேகமாகப் பரவுகின்றன.

    கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து இதற்கு முன்பும் இதுபோன்ற வதந்திகள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் ரவின. அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக 99 சதவீதம் உறுதியாகக் கூற முடியும் என வடகொரியாவிலிருந்து வெளியேறிய ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றியதால் அது பொய் என உறுதியானது.

    Advertisement

    கிம் ஜாங் உன் தொடர்பான வதந்திகள் மீண்டும் மீண்டும் எழ முக்கியக் காரணம், அவருக்குப் பிறகு வடகொரியாவை யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியால் தான். வடகொரியாவில் கடந்த மூன்று தலைமுறைகளாக கிம் குடும்பத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர். கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங், அவரது மகன் கிம் ஜாங் இல், பின்னர் கிம் ஜாங் உன் என அதிகாரம் கைமாறியது. கிம் இல் சங் தனது மகன் கிம் ஜாங் இல்லுக்குப் பல ஆண்டுகளாக தயார்படுத்தியிருந்தார்.

    அதனால் கிம் இல் சங் இறந்தபோது அவரது மகன் கிம் ஜாங் இல் எளிதாக 1994 அதிபராக பதவி ஏற்று கொண்டார். ஆனால் கிம் ஜான் உன் அவ்வளவு எளிதாக பதவியைப் பெற்று விடவில்லை, 2008இல் கிம் ஜாங் இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போது அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு தான் கிம் ஜாங் உன் வந்தார். 2011ல் அவர் தந்தை இறந்த பிறகு தான் அவர் வடகொரியாவின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பிறகு இன்று வரை தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த பல ஆண்டுகள் அவர் முயற்சி செய்து வந்திருக்கிறார்.

    Advertisement

    தனக்கு பிறகு தனது மகள் கிம் ஜூ ஏவை அடுத்த வாரிசாக தயார்படுத்தி வந்த நிலையில் அவர் அடிக்கடி பொது நிகழ்வுகளை பங்கேற்றது இந்த விவகாரத்தை பெரிதாக்கியது. மேலும் தென்கொரியா உளவுத்துறை அவரது தங்கைதான் அடுத்த வாரிசு என கிளப்பிவிட்ட நிலையில் நாட்டில் குழப்பம் ஏற்படும் என்பதால்தான் அடிக்கடி கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக வருதந்தி பரப்பப்படுகிறது என்கின்றனர்.

    உண்மையில் கிம் ஜாங் உன்னுக்கு என்ன பிரச்சனை என பார்க்கும்போது, அவர் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், அதிக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்கின்றனர். மேலும், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என தென்கொரியாவில் உளவுத்துறை ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே கிம் குடும்பத்தினர் பலரும் இதய நோய் பக்கவாதம் தொடர்பான உடல்நல பிரச்சினைகள் பாதிக்கப்பட்டவர்கள் தான். அதனால் அதே பிரச்சனைகள் கிம்முக்கும் வரும் என கிளப்பி விடுகிறது என்றனர்.

    மேலும் வடகொரியாவிடம் அதிக அளவில் அணு ஆயுதங்களும், பெரிய அளவிலான ஏவுகணைகளும் இருக்கும் நிலையில் அந்நாட்டில் அதிகார போட்டி ஏற்பட்டால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, உலக அளவில் பிரச்சினை உருவாகும். இதனால் சீனாவுக்கு அகதிகளாக அதிக மக்கள் செல்வார்கள், தென்கொரியா சண்டை செய்யும். அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வரும், அதனை எதிர்க்க சீனாவும் களமிறங்கினால் பெரிய பிரச்சனை எழும் என்பதால் தான் கிம் ஜாங் உன்னின் மரணம் அடிக்கடி பேசு பொருளாகிறது என்கின்றனர்.

    English Summary

    North Korean media releases photos of Kim Jong Un amid death rumours, raising questions about the source and succession speculation.