பாகிஸ்தான் நிலைமையை பாருங்க.. இதுல காஷ்மீர் வேணுமாம்! இப்படி ஆயிடுச்சே!
இஸ்லாமாபாத்: ஈரான் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் போன்ற பொருளாதார பலவீன நாடுகளை ரொம்பவே பாதித்திருக்கிறது. இந்நிலையில் நிலைமையை சமாளிக்க, தினமும் 2 மணி நேரம் திட்டமிட்ட மின்வெட்டை பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு சோஷியல் மீடியாக்களில் விவாதங்களாக வெடித்திருக்கின்றன. காஷ்மீர் மீது உரிமை கொண்டாட பாகிஸ்தான் முயன்று வரும் நிலையில், தற்போது உள்ள சூழ்நிலைக்கு.. காஷ்மீர் கேக்குதா? என நெட்டிசன்கள் விமர்சித்திருக்கின்றனர்.

பாகிஸ்தானில் எரிசக்தி செலவுகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் நாடு தினமும் 2 மணி நேர மின்வெட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு இணையத்தில் பரவலான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
சில நகரங்களுக்கு இந்த மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றாலும், எரிசக்தி கட்டணத்தை சமாளிக்க முடியாததால், பாகிஸ்தான் தினமும் மாலையில் 2 மணி நேரத்திற்கு பவர் கட் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
மாலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மின் நுகர் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த நேரத்தில், விட்டு விட்டு 2 மணி நேரம் விரை பவர் கட் செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்திருக்கிறது.
நீர்மின்சக்தி உற்பத்தி தற்போது நாடு முழுவதும் குறைந்திருக்கிறது. அதேநேரம் ஈரான் போர் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்திருக்கிறது. எனவேதான் இந்த மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நம்மூர் கிராமங்களை போல, அங்கும் ஏற்கெனவே அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருக்கிறது. இப்படி இருக்கையில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு என்று டைம் பிக்ஸ் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மீது நீண்ட காலமாக கண் இருக்கிறது. இப்படி இருக்கையில், உங்க ஊருலயே நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மின் வெட்டு செய்றீங்க.. இது காஷ்மீர் கேக்குதோ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications