சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை இதுதான்.. கண்ணீருடன் பகிர்ந்த உதவியாளர்!

  • மதுரை: மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை குறித்து அவரின் உதவியாளர் ராஜா தெரிவித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலினை சாலமன் பாப்பையா எழுதி முடித்துவிட்டதாக கூறிய அவர், அதனை விரைவில் வெளியிட முயற்சித்து வந்ததாக தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக காலமானார். 90 வயதை எட்டிய அவர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் காலமானார். நீண்ட காலமாக பட்டிமன்ற மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாற்றல், நகைச்சுவை கலந்த அணுகுமுறை மூலம் மக்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றவர்.

    Advertisement

    இவரின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை தொடர்பாக அவரின் உதவியாளர் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதி புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். அதனை வெளியிட தயாராகி வந்தார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாதிரி ஒரு இடத்தை பிடித்து வெளியிட வேண்டும்.

    பாரதி நூலை மட்டும் வெளியிட வேண்டும் என்பதே ஆசை. பாரதியின் வரலாற்றை பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் நான் கூடுதல் தகவல்களோடு எழுதி இருக்கிறேன். அதனை மக்களிடம் ஒப்படைத்துவிட்டால், தனது அத்தியாயம் நன்றாக இருக்கும் என்று கருதினார். அது நடக்காமல் போய்விட்டது.

    Advertisement

    பெரியார் கொள்கையில் வாழ்ந்ததால், இந்திய சட்ட முறைப்படி எரியூட்டல் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கிறார். அவருக்கு நெருக்கமான அனைவரும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதனால் நாளை அவரது இறுதி சடங்கு நடத்தப்படும். அரசு மரியாதை கொடுக்க வேண்டுமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட அனைவருடனும் நட்புடன் பயணம் செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இவரின் பேட்டியை தொடர்ந்து சாலமன் பாப்பையாவின் கடைசி நூலினை வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளன.

    English Summary

    Solomon Pappaiah: Late Solomon Pappaiah Assistant Raja Reveals Tamil Icon’s Final Wish