ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது திலக் வர்மா.. 2 வீரர்களையும் பிளேயிங் 11ல் சேர்க்க கூடாது.. காரணம் என்ன?

  • மும்பை: இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் துணைக் கேப்டன் திலக் வர்மா ஆகியோர் விளையாடுவது மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இருவருமே தேவைக்கேற்ப அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் என்பதோடு, களத்தில் செட்டிலாக குறைந்தது 15 பந்துகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். இதனால் இருவரில் ஒருவரை மட்டுமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சமீபத்தில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் துணை கேப்டனாக பொறுப்பேற்ற திலக் வர்மா ஆகிய இருவரின் பேட்டிங் அணுகுமுறை, தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இருவருமே தேவைக்கேற்ப மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்து அதிரடியாக விளையாடக் கூடியவர்கள்.

    Advertisement

    இருவரும் அசாத்திய திறமை படைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்கள் இருவருக்குமே ஒரு பொதுவான பேட்டிங் பாணி உள்ளது. களமிறங்கியவுடன் உடனடியாக ரன் குவிக்க முற்படாமல், பிட்ச் மற்றும் பந்துவீச்சை கணித்து செட்டிலாக (Settled) அவர்கள் குறைந்தது 15 பந்துகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.

    டி20 போன்ற குறுகிய வடிவப் போட்டிகளில், மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து வரும் இரண்டு முதன்மை பேட்டர்களும் செட்டிலாக இத்தனை பந்துகளை எடுத்துக் கொண்டால், அது ரன் ரேட்டை கடுமையாகப் பாதிக்கும். நேற்றைய போட்டியில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் 37 ரன்களை அடித்திருந்தார். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா கடைசி ஓவரில் மட்டுமே அதிரடி காட்டினார்.

    Advertisement

    இதனால் பின்வரிசையில் வரும் வீரர்களுக்கு ரன் குவிக்க வேண்டிய இமாலய அழுத்தம் ஏற்படுகிறது. இவர்களின் இந்த ஒரே மாதிரியான அணுகுமுறையால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருவரையும் ஒரே நேரத்தில் ஆட வைப்பது அணிக்கு சாதகமாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் தொடக்கம் முதலே அதிரடி காட்டக்கூடிய வகையில் விளையாட வேண்டும்.

    உதாரணமாக ஆர்சிபி அணியின் டிம் டேவிட் போன்ற பவர் ஹிட்டர்களின் அவசியம் இருக்கிறது. இதனை உணர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். ஏனெறால் டாப் 3ல் சஞ்சு சாம்சனை களமிறக்கினால், இஷான் கிஷனை நம்பர் 5ல் விளையாட வைக்க முடியும். ஹர்திக் பாண்டியா போன்றோர் வந்தால், பேட்டிங் இன்னும் பலமாக மாறும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Shreyas Iyer: India Might Be Forced to Choose Between Captain Shreyas Iyer and Vice-Captain Tilak Varma in Playing XI