டெல்லி: டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அணியின் உரிமையாளர்களான ஜிஎம்ஆர் குழுமம் மீண்டும் டெல்லி அணி நிர்வாகத்திற்கு வந்திருக்கும் சூழலில், கங்குலி மீண்டும் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் ஹேமங் பதானி மற்றும் வேணு கோபால் ராவ் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் அடுத்தக்கட்ட பயிற்சியாளர்கள் நியமனம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லி அணியின் நிர்வாக அதிகாரம் மீண்டும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கைகளுக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் ஜிஎம்ஆர் குழுமம் கைகளில் நிர்வாகம் இருந்த நிலையில், தற்போது மாறி இருக்கிறது. இதனால் பயிற்சியாளர்களாக இருந்த ஹேமங் பதானி மற்றும் வேணு கோபால் ராவ் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது புதிய பயிற்சியாளராக கவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் கங்குலி டெல்லி அணியின் ஆலோசகராக பணியாற்றி இருந்தார். இதன்பின் ஜிஎம்ஆர் குழுமத்தின் கைகளுக்கு அதிகாரம் மாறியதால், கங்குலி உடனடியாக எஸ்ஏ20 லீக் தொடரில் பணியாற்ற தொடங்கினார். ப்ரிடோரியா கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை பைனலுக்கு அழைத்து சென்றார். இதனால் ஜேஎஸ்டபிள்யூ நிர்வாகத்தின் அதீத நம்பிக்கை காரணமாக இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் டிரேட் விவகாரத்திலும் கங்குலி முக்கிய முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் டெல்லி அணியின் கேப்டன்சியிலும் சில மாற்றங்கள் நடக்கவுள்ளன. அக்சர் படேலை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு கேஎல் ராகுல் கொண்டு வரப்பட இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. நவம்பர் 15ஆம் தேதி ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை 10 அணிகளின் நிர்வாகங்களும் வெளியிட வேண்டும். இதன்பின் டிசம்பர் 3வது வாரத்தில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது. இந்த ஏலத்திற்கு பின் டெல்லி அணியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். மேலும் யுவராஜ் சிங் துணைப் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.