Tamil Nadu Floor Test LIVE: முதல்வர் விஜய் வெற்றி.. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வென்றது..

Tamil Nadu Assembly  Vijay  TVK                                                                          Other Tags
Tamil Nadu Assembly  Vijay  TVK                                                                          Other Tags

May 13, 2026, 12:06 pm IST

தமிழக சட்டசபையில் டிவிஷன் வாரியாக முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த உறுப்பினர்களின் விவரத்தை இங்கு பார்க்கலாம்.
May 13, 2026, 12:01 pm IST

சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதை தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஒத்திவைத்தார்.
May 13, 2026, 11:57 am IST

அரசியலுக்காக நாங்கள் யாரையும் புண்படுத்த மாட்டோம் – விஜய்
May 13, 2026, 11:57 am IST

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளோம் – விஜய்
May 13, 2026, 11:54 am IST

நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வென்ற பிறகு முதல்வர் விஜய் சட்டசபையில் உரை
May 13, 2026, 11:52 am IST

முதல்வர் விஜய் வெற்றி.. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள்

முதல்வர் விஜய் வெற்றி.. நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 144 வாக்குகள்
முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு மொத்தம் 144 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 22 பேர் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதனால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 144 வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு
May 13, 2026, 11:51 am IST

பாஜக எம்எல்ஏ போஜராஜன் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நடுநிலை வகித்தார்.
May 13, 2026, 11:51 am IST

பாமக எம்எல்ஏக்கள் 4 பேர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நடுநிலை வகித்தனர்.
May 13, 2026, 11:51 am IST

எடப்பாடி பழனிச்சாமி, ஓஎஸ் மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், கேசி கருப்பண்ணன், கோவிந்தராஜன், சு பழனிச்சாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு
May 13, 2026, 11:51 am IST

எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி லீமா ரோஸ், நந்தம் விஸ்வநாதன், க மோகன், ரவி மனோகரன், இரா ராகேஷ், எம்ஆர் விஜபாஸ்கர், கேசி வீரமணி எஸ் ஜெயக்குமார், பி ஹரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
May 13, 2026, 11:37 am IST

2வது டிவிஷனில் மொத்தம் 42 எம்எல்ஏக்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
May 13, 2026, 11:35 am IST

குரல் வாக்கெடுப்பாக அல்லாமல் தலைகளை எண்ணி கணிக்கும் முறைப்படி தமிழ்நாடு அரசின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
May 13, 2026, 11:34 am IST

எண்ணி கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
May 13, 2026, 11:33 am IST

சட்டசபையின் கதவுகளை மூட அவை காவலர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவு
May 13, 2026, 11:33 am IST

சட்டசபையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தொடக்கம்.
May 13, 2026, 11:26 am IST

குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடுவதாக சொன்னதற்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். குதிரை பேரத்தில் இல்லை குதிரை வேகத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது – விஜய்
May 13, 2026, 11:26 am IST

முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்
May 13, 2026, 11:24 am IST

நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுகவில் நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் உள்ளிட்டோருக்கு முதல்வர் விஜய் ஆதரவு.
May 13, 2026, 11:19 am IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு – உதயநிதி ஸ்டாலின்

புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது. கூவத்துரையே மிஞ்சும் அளவுக்கு கூத்து நடக்கிறது. எங்களின் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்கிறது – உதயநிதி ஸ்டாலின்
May 13, 2026, 11:18 am IST

அதிமுக 2 ஆக பிளவுப்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பு உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்த தலைவரின் வீட்டுக்கு புது சோபா போனது. பின்னாலே முதல்வரும் போனார். கட்சி தாவுறதுக்கு முன்னாடியே முதல்வர் அந்த கட்சிக்கு போகிறது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.. சேஞ்ச் சேஞ்ச் என்று சொன்னார்களே பின்னணியில் பெரிய எக்ஸ்சேஞ்ச் உள்ளதா? என்று மக்கள் கேட்கின்றனர் – உதயநிதி ஸ்டாலின்
May 13, 2026, 11:18 am IST

நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் கட்சியின் தலைவர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஒன்றை ராஜினாமா செய்தார். தொகுதி மக்களுக்கு இதுவரை விஜய் நன்றி கூட தெரிவிக்கவில்லை – உதயநிதி ஸ்டாலின்
May 13, 2026, 11:09 am IST

சட்டசபை 234 உறுப்பினர்களை கொண்டது 118 உறுப்பினர்களை கொண்டவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். நம்பிக்கை தீர்மானம் கோரும் கட்சிக்கு 108 உறுப்பினர்கள் தான் உள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
May 13, 2026, 11:09 am IST

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை– எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
May 13, 2026, 11:09 am IST

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
May 13, 2026, 11:05 am IST

விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு

விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவை தெரிவிக்கிறது. நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை – எஸ்பி வேலுமணி
May 13, 2026, 11:03 am IST

எஸ்பி வேலுமணி பேச எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு

சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எஸ்பி வேலுமணி பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் கடும் எதிர்ப்பு. சபாநாயகர் ஜேசிடி பிரபாகருடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் வாக்குவாதம்
May 13, 2026, 11:03 am IST

விஜய் தீர்மானத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு

விஜய் தீர்மானத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு
முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து தான் வாக்களிப்பார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் – எடப்பாடி பழனிச்சாமி
May 13, 2026, 10:57 am IST

அரசின் தீர்மானத்தை யாரும் வழிமொழிய தேவையில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில்
May 13, 2026, 10:57 am IST

முதல்வரின் தீர்மானத்தை யாரும் வழிமொழியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
May 13, 2026, 10:57 am IST

தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+