பணத்தையும் வாங்கிக்கொண்டு தவெகவுக்கு வாக்களித்த மக்கள்! இது புதுசா இருக்கு!

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கள நிலவரங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து, வாக்காளர்களுக்குப் பணமும், அண்டா-குண்டா போன்ற பரிசுப் பொருட்களையும் வாரி இறைத்த திமுக, அதிமுக கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தவெக 103 இடங்களிலும், அதிமுக 68 இடங்களிலும், திமுக 62 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

TVK Tamil Nadu


பணம் ஒரு பொருட்டல்ல?

ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் மூலம் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை விநியோகம் செய்திருந்தன. ஆனால், தவெக வேட்பாளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இந்த முறையைக் கையாண்டனர். பாரம்பரிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது தவெகவின் செலவு மிகவும் குறைவுதான்.

இருப்பினும், வாக்காளர்கள் அந்தப் பணத்தையும் பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு, தங்களது வாக்குகளை அமைதியாக 'தளபதி' விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏன் இந்த முரண்பாடு? பணத்தை வாங்க மறுக்காத வாக்காளர்கள், தமிழகத்தில் ஒரு புதிய மாற்றம் தேவை என்பற்காக வாக்களித்துள்ளனர். பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் மீதுள்ள நீண்ட கால அதிருப்தி மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களின் எழுச்சி இதற்கு முக்கியக் காரணமாகும். வழக்கமாக பணத்தை வாங்கினால் அதே கட்சிக்குதான் மக்கள் ஓட்டுபோடும் ட்ரெண்ட் இப்போது மாறியுள்ளது.

திராவிடக் கோட்டைகளில் ஏற்பட்ட சரிவு

திமுக மற்றும் அதிமுகவின் பலம் பொருந்திய வேட்பாளர்களே இந்தத் தேர்தலில் பின்தங்கியுள்ளனர்.

  • தவெக (TVK): 103 இடங்கள்
  • அதிமுக+: 68 இடங்கள்
  • திமுக+: 62 இடங்கள்
  • நாதக: 0 இடங்கள்

தேர்தல் முடிவுகளின் அரசியல் யதார்த்தம்

வாக்காளர்கள் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டாலும், இறுதியாக வாக்குச் சாவடியில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவான பார்வையுடன் இருந்ததை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+