திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் காங்கிரஸ்? முக்கிய தலைவர் போட்ட ட்வீட்.. அமைதி புரட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. உலக வரலாற்றில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட Reformasi (இந்தோனேசியா), Aragalaya (இலங்கை), மற்றும் Arab Spring போன்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில், தமிழக மக்கள் ஒரு அமைதி புரட்சியை' தேர்தல் களத்தின் வழியே நிகழ்த்தியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் வங்கதேசத்தில் எழுச்சிகளில் பொருளாதார நெருக்கடியும், சர்வாதிகாரப் போக்கும் மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது. தமிழகத்தில், பல ஆண்டுகளாக நிலவிய திமுக, அதிமுக எதிரான 'மாற்று' தேடல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மூலம் பேரெழுச்சியாக மாறியுள்ளது.

Congress MP Karti Chidambaram

நேபாளத்தின் Jana Andolan III எவ்வாறு முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததோ, அதேபோல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஏகபோக உரிமையை அசைத்துப் பார்க்கும் வகையில் தவெக கட்சி வந்துள்ளது.

ஆனால், அண்டை நாடுகளில் நிகழ்ந்த எழுச்சிகள் வீதிகளில் போராட்டங்களாக வெடித்தன. ஆனால் தமிழக மக்கள், ஜனநாயக முறைப்படி வாக்குச்சீட்டின் மூலம் அந்தப் புரட்சியைச் சாதித்துள்ளனர் என்பதை குறிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் தனது பதிவை போட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ்க்கு இடையே தேர்தல் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. பல காங்கிரஸ் தலைவர்கள், விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்று போர்கொடி தூக்கி இருந்தனர். ஆனால், கடைசியில் திமுக உடன் தான் காங்கிரஸ் கூட்டணி போட்டது.

தற்போது தவெக முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர், போட்டுள்ள பதிவு கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இது திராவிட அரசியலின் முடிவு அல்ல, மாறாக புதியதொரு மாற்றத்திற்கான ஆரம்பம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+