விஜய் பக்கத்துவீட்டுக்காரர் டிவீட்.. தமிழ்நாட்டில் திமுக-வுக்கு தான் மகுடம்.. அப்போ தவெக?
சென்னை நீலாங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் காலனியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் வசித்து வரும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், தேர்தல் முடிவுகள் குறித்த சந்தை கணிப்புகளை டிவிட்டரில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வரும் முன்பே பி.ஆர்.சுந்தர் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு பக்கத்து வீட்டுக்காரர் பி.ஆர்.சுந்தர்
பி.ஆர்.சுந்தர் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆப்ஷன் டிரேடர்-களில் ஒருவர் ஆவார். சுந்தர் மற்றும் நடிகர் விஜய்யும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல். இருவரின் வீடுகளும் ஒரே காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளதால், இருவருக்கும் இடையே பக்கத்துவீட்டுக்காரர் உறவு உள்ளது. இந்த பின்னணியில், தேர்தல் சந்தை கணிப்புகளை பி.ஆர்.சுந்தர் பகிர்ந்திருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
பி.ஆர்.சுந்தரின் தேர்தல் கணிப்புகள்
பி.ஆர்.சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்டிங் மார்க்கெட் (prediction markets) அடிப்படையிலான கணிப்புகளை பகிர்ந்துள்ளார். அவரது கணிப்பின்படி:
அசாம் - பாஜக தெளிவான வெற்றி பெறும்.
மேற்கு வங்காளம் - மிக நெருக்கமான போட்டி, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) முன்னிலை வகிக்கும்.
கேரளா - மிக நெருக்கமான போட்டி, கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை பெறும்.
தமிழ்நாடு - திமுக தெளிவான வெற்றி பெறும்.
இன்று ஐந்து மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, எக்ஸிட் போல் முடிவுகள் மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில், இந்த கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பி.ஆர்.சுந்தர் போன்ற புகழ்பெற்ற டிரேடர்கள் தேர்தல் முடிவுகளை சந்தை கண்ணோட்டத்தில் பார்ப்பது வழக்கம். பெட்டிங் மார்க்கெட் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள இந்த கணிப்புகள், தேர்தல் முடிவுகள் எப்படி சந்தையை பாதிக்கும் என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ள உதவும் என்று பலர் கருதுகின்றனர். இருப்பினும், இவை வெறும் சந்தை அடிப்படையிலான கணிப்புகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பி.ஆர்.சுந்தரின் தேர்தல் சந்தை குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள், அரசியல் மற்றும் பங்குச் சந்தை ஆர்வலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில மணிநேரத்தில் வரும் எக்ஸிட் போல் முடிவுகள், பி.ஆர்.சுந்தரின் கணிப்புகளுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications