எமோஷனலான ஜனநாயகன் திரைப்படம்.. தியேட்டர்களில் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத்தின் ரியாக்சன்

  • தூத்துக்குடி: முதல்வர் விஜய் மற்றும் இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகெங்கும் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்தவகையில் ஜனநாயகன் திரைப்படம் தூத்துக்குடி திரையரங்கில் வெளியானது,. அமைச்சர் ஸ்ரீநாத் உடன் சேர்ந்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேபோல் ஜனநாயகன் திரைப்படத்தை ராஜபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ரசிகர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

    Advertisement

    தூத்துக்குடியில் மாநகரில் 4 திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் திரைப்படம் வெளியானது.. இந்த தியேட்டருக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வருகை தந்தார்.. அப்போது அமைச்சர் ஸ்ரீநாத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் மேல தாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திரையரங்கு வாயிலில் படம் வெளியாவதை முன்னிட்டு பிரம்மாண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது.

    Advertisement

    அதனை அமைச்சர் ஸ்ரீநாத் வெட்டினார். அதன் பின்பு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டாr. அப்போது ஸ்கிரீன்ல முதல்வர் விஜயின் பழைய திரைப்படங்களின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. அப்போது திடீரென எழுந்து நின்று அமைச்சர் ஸ்ரீநாத் தளபதி வாழ்க தளபதி வாழ்க என்று கோஷமிட்டார்.. அப்போது ரசிகர்களும் தளபதி வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள்..

    ஜனநாயகன் திரைப்படத்தை ராஜபாளையத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ரசிகர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். முன்னதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்வையிட்டு இனிப்பு வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மூன்று திரையரங்குகளில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம் வெளியானது. படம் வெளியான மூன்று திரையரங்குகளை சுற்றிலும் ரசிகர்கள் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி படங்களுடன் கூடிய ஏராளமான வாழ்த்து பதாகைகளை வைத்திருந்தனர்.

    Advertisement

    சத்திரப்பட்டி மேம்பாலம் அருகே உள்ள தியேட்டர் அருகே குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் முதல்வரின் வாழ்த்து பதாகைக்கு பால் அபிஷேகம் செய்தனர். ரசிகர்களின் இந்த கொண்டாட்டத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி, காரில் அமர்ந்தவாறு பார்வையிட்டார். பின்னர் மற்றொரு திரையரங்குக்கு சென்ற அவர் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய பின் திரையரங்கில் அமர்ந்து படத்தை ரசித்துப் பார்த்தார். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் சத்திரப்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மூன்று திரையரங்குகளில் ஏழு திரைகளில் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகி உள்ளது,. திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் நடித்த திரைப்படப் பாடல்களுக்கு நடனம் ஆடியது மட்டுமின்றி அவருடைய கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பட்டாசும் வெடித்து கொண்டாடினார்கள்.

    English Summary

    The movie Jananayagan was released in a theater in Tuticorin, where fans celebrated alongside Minister Srinath. Similarly, in Rajapalayam, Minister Jagadeeswari watched the film Jananayagan in a theater, seated among the fans.