தூத்துக்குடி அங்கன்வாடியில் என்ன நடந்தது? முட்டையை உடைத்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த காரணம்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சுக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புகிறார்கள்.. அங்கு இப்படியொரு அலட்சியப்போக்கு நிலவுவது பெற்றோரின் நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. என்ன தான் நடந்தது விளாத்திகுளத்தில்?

    Advertisement

    விளாத்திகுளம் அருகே உள்ளது ரெகுராமபுரம் என்ற கிராமம். இந் கிராமத்தை சேர்ந்த மக்கள், தங்கள் குழந்தைகளை ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்விக்காக அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சேர்த்து வருகின்றனர்.

    Advertisement

    தூத்துக்குடி அங்கன்வாடி மையம்

    அந்தவகையில், அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இங்கு குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது...
    இதில், மையத்துக்கு வரும் 1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரிடம் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு மையத்திலேயே முட்டையை வேக வைத்து, உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

    இறந்து கிடந்த கோழிக்குஞ்சு

    இந்நிலையில், கடந்த 20-ந்தேதி இந்த மையத்தில் 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) ஒரு முட்டையை வேக வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த முட்டையை உடைத்து பார்த்தபோது, அதற்குள் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட இந்த முட்டையை உடனடியாக எடுத்துக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

    ஆனாலும் அங்கன்வாடி ஊழியர்கள் இச்சம்பவம் குறித்து முறையான விளக்கமளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    தரமில்லாத சாப்பாடு

    இதையடுத்து அந்த அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.. அந்த மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களும் தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருக்கிறதாம்.. குடிநீர் தொட்டிகள் நீண்டநாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகக் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    அதுமட்டுமல்ல, மையம் செயல்படும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், விளையாட்டு உபகரணங்கள் பழுதாகிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    வெளி முட்டையா? ஓடுகள் பரிசோதனை

    பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் உயிரிலும் விளையாடும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.. மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தைச் சீரமைத்து, சுத்தமான குடிநீர் மற்றும் தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வெளியே இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டதா? என்பது தெரியவந்துமே, அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தந்துள்ளார்.

    English Summary

    What Happened at a Thoothukudi Anganwadi? Parents Shocked After Cracking Open an Egg