கோவில்பட்டியில் என்ன நடக்கிறது.. நேரிலேயே சென்ற தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள்.. வார்னிங்

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடமாக மாறி உள்ளது.

    Advertisement

    இது குறித்த புகார்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சென்றது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு நின்ற கடைகள் மற்றும் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி வைத்து அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் மீண்டும் அப்பகுதி ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து புகார் சென்ற நிலையில் இன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாத்தூர் சுங்கச்சாவடி பகுதி நிர்வாக அலுவலர் லோகநாத பாபு மற்றும் அலுவலர்கள் அப்பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடம் இடத்தை ஆக்கிரமித்து கடைகளை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் சட்டப்படி காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினர். மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் சர்வீஸ் சாலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.. இல்லை என்றால் அவை அகற்றப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மேலும் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து கழிவுநீர் சர்வீஸ் நீர்வரத்து ஓடை பகுதி வழியாக செல்வதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இனாம்மணியாச்சியில் உள்ள கண்மாய் பகுதியில் கலப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    The National Highways Authority of India (NHAI) officials have issued a warning that legal action will be taken if shops are set up or vehicles are parked illegally under the flyover on the National Highway near Kovilpatti in Thoothukudi district.