ஸ்டாலின் கொடுத்த தைரியம்.. அரசியல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த கீர்த்தனா.. விஜய்க்கு தெரியுமா

  • விருதுநகர்: கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யபடுத்தியது. தவெகவில் வெற்றி பெற்ற பலர் பலவிதமான பின்னணியில் இருந்து வந்துள்ளனர். விஜய் ரசிகர் மன்றம், அதிமுக, அரசியல் வியூக வகுப்பாளராக இருந்தவர்கள் அமைச்சர் ஆகியுள்ளனர். இந்நிலையில் தான் 3 முதலமைச்சர்களிடம் பணியாற்றியதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பணியாற்றியபோது அரசியலில் வர தைரியம் வந்ததாகவும் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

    Advertisement

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, "நான் படித்து முடித்தவுடன் 2 வேலை கிடைத்தது. டேடா அனலிஸ்டுக்கு ரூ.30,000 சம்பளம், சமூக சேவைக்கு ரூ.9,600 சம்பளம் சொன்னார்கள். நான் சமூக சேவையை தேர்வு செய்தேன். பெண்கள் பின்னடைந்து விடக்கூடாது என்பதற்காக சமூக சேவையை தேர்வு செய்தேன். மகாராஷ்ராவில் அரசுப் பள்ளிகளை முன்னுக்கு கொண்டு வர பல பணிகளை செய்தேன்.

    Advertisement

    3 முதலமைச்சர்களிடம் பணி

    அரசு பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்துக்காக குடிசை பகுதியில் இருந்து பணியை தொடங்கினேன். அங்கு தான் அரசியல் ஆர்வமும் வந்தது. அரசியலை பற்றி தெரிந்து கொள்வதற்காக அரசியல் ஆலோசகராக இணைந்தேன். மூன்று முதலமைச்சர்களிடம் வேலை பார்த்துள்ளேன். ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நம் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்கு வங்கம் முன்னாள் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஆகியோரிடம் பணியாற்றினேன்.

    அவர்களிடம் பணியாற்றிய போது ஒரு தைரியம் வந்தது. நம்மாலும் அரசியலில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. சமூக சேவை காரணத்திற்காக நான் அரசியலில் காலடி எடுத்து வைத்தேன். அரசியலில் காசு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற எண்ணம் பரவலாக உள்ளது. நான் அதை நினைக்கவில்லை. 8 ஆண்டுகளாக அரசியல் ஆலோசகராக இருந்தபோது கிடைத்த காசை சேர்த்து வைத்தேன்.

    Advertisement

    விஜய் நினைக்கும் மாற்றம்

    மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அந்த காசை வைத்துதான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். மக்களை நம்பி தான் ஆரம்பித்தேன். மக்கள் என்னை கைவிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்து, இங்கு நிற்பதற்கு விஜய் அண்ணாவும், தவெகவும் மட்டுமே காரணம். எல்லாருக்கும் திறமை இருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காது. வாய்ப்பு கொடுக்கிற மனது அவருக்கு இருந்தது.

    விஜய் நிறைய விஷயங்களை மாற்ற நினைக்கிறார். அதற்கு நான் துணை நிற்பேன். குறுகிய வட்டத்தில் நிற்காமல் தடைகளை உடைத்தெறிய வேண்டும். சமூகத்தில் போராட்டம் அதிகமாக இருக்கும். பெண்ணாக இருப்பது சுலபமல்ல. வெற்றி பெற்றுவிட்டால் மற்ற பெண்களுக்கும் வழிகாட்டுவோம். அந்த வழியை நீங்கள் எல்லாரும் பின்பற்ற வேண்டும். நிறைய பெண் அரசியல்வாதிகள், முதலமைச்சர்கள், பிரதமர்கள் உருவாக வேண்டும்" என்றார்.

    English Summary

    Minister Keerthana said, I worked with 3 Chief Ministers. MK Stalin also important reason for my political entry.