ஆம்பூர் அருகே மைனர் பெண் மாயம்.. ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த கார் டிரைவர் போக்சோவில் கைது!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கார் டிரைவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவர் காணாமல் போனதாக, அவரது பெற்றோர் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Ambur Car Driver Arrested Under POCSO Act for Marrying Minor Girl

இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விசாரணையில், காணாமல் போன மைனர் பெண்ணை டிரைவர் ஒருவர் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகனும், கார் ஓட்டுநருமான விஸ்வா என்பவர் மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் விஸ்வா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் கிராமிய போலீசார், விஸ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+