நண்பர்கள் கிஃப்ட் ஆக கொடுத்த லாட்டரிக்கு அடித்த 9 கோடி பரிசு.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

  • வாஷிங்டன்: கணவரின் பிறந்தநாளை அவரது மனைவி கேக் வெட்டி, நண்பர்களை அழைத்து வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு நண்பர்கள் சேர்ந்து லாட்டரி டிக்கெட்டை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த லாட்டரிக்கு எப்படி பரிசு அடிக்கும் என நினைத்த தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நண்பர்கள் கொடுத்த அந்த லாட்டரிக்கு ரூ.9 கோடி பரிசாக அடித்துள்ளது. இதனால் எல்லையில்லா உற்சாகத்தில் திளைத்த அந்த தம்பதியினர் விரைவில் 40-வது திருமண நாள் வருகிறது. அதை சொகுசு கப்பலில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

    Advertisement

    லாட்டரியில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாது. பல வருடமாக லாட்டரி வாங்கி ஒரு ரூபாய்கூட பரிசு அடிக்கமால் ஏமாறுபவர்களும் இருக்கிறர்கள்.. வாங்கிய முதல் லாட்டரிக்கே பல கோடிகள் பரிசாக அடித்து ஒவர் நைட்டில் வாழ்க்கை மாறிய நிகழ்வுகளும் நடக்கின்றன.

    Advertisement

    நண்பர்கள் கொடுத்த லாட்டரி

    வந்தால் லாபம்.. போனால் போகட்டும் என பலரும் லாட்டரியில் பணம் அடிக்காது என்று தெரிந்தே டிக்கெட்டுகளை வாங்குவதையும் பார்க்க முடியும். ஒரு சிலருக்கு லாட்டரி வாங்கும் எண்ணமே இருக்காது. நண்பர்களின் அறிவுறுத்தலாலோ.. யாராவது பரிசாக கொடுப்பதாலோ.. லாட்டரியை வாங்கி வைத்து இருப்பார்கள். சில நேரங்களில் இப்படி வாங்கி வைப்பவர்களுக்கு கூட பரிசு அடித்து விடுகிறது.

    சினிமாவில் கூட இதையெல்லாம் பார்த்தது இல்லையே என நினைக்கும் அளவுக்கு சில விசித்திர நிகழ்வுகள் லாட்டரியால் நடந்துவிடுவை பார்க்கிறோம். கிட்டத்தட்ட அப்படியான ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் இல்லியானாஸ் மாகாணத்தில் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.

    Advertisement

    இல்லியானாஸ் மாகாணத்தில் உள்ள பிரட்வுட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் பிறந்த நாளை வெகுவிமர்சியாக அவரது மனைவி கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த நண்பர்கள் சிலர் அவருக்கு குழுவாக லாட்டரி டிக்கெட்டுகளை பரிசாக வாங்கி கவரில் வைத்து கொடுத்து இருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு டிக்கெட்டை பார்த்த அவர் எதும் பரிசு அடித்து இருக்கிறதா? என்று பார்த்து இருக்கிறார்.

    ரூ.9 கோடி பரிசு

    அதுவும் சரியாக வின்னிங் நம்பர் பார்க்க தெரியாமல் ஆயிரம் டாலர் பரிசாக விழுந்து இருக்கிறது என நினைத்த்துக்கொண்டு கணவனும் மனைவியும் லாட்டரி அலுவலகம் சென்று இருக்கிறார்கள். அங்கு இருந்த லாட்டரி நிறுவனத்தின் அதிகாரியிடம் எங்களுக்கு ஆயிரம் டாலர் பரிசாக அடித்து இருக்கிறது. பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

    Advertisement

    அவர்களை ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்த அந்த அதிகாரி உங்களுக்கு அடித்து இருப்பது ஆயிரம் டாலர் அல்ல. ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) என்று சொல்லியிருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இன்ப அதிர்ச்சியில் அவரது மனைவி, அங்கேயே ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.

    சொகுசு கப்பலில் கொண்டாட போறோம்

    இவ்வளவு பெரிய தொகை பரிசு அடிக்கும் என நான் கனவில் கூட நினைத்து இல்லை என்று கூறிய அவர் பரிசாக கிடைத்த தொகையை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

    Advertisement

    இது குறித்து அவர் கூறுகையில், "புளோரிடாவுக்கு குடும்பத்துடன் செல்ல இருக்கிறோம். சில தொகையை அதற்கு செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய கார் ஒன்றும் சிறிய வாகனம் ஒன்றையும் வாங்க திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் 40-வது திருமண நாள் வருகிறது. அதை சொகுசு கப்பலில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    English Summary

    A woman celebrated her husband's birthday in grand style by cutting a cake and inviting friends. During the celebration, his friends gifted him a lottery ticket. The couple, who had wondered how such a ticket could possibly win, were in for a pleasant surprise: the ticket gifted by their friends won a prize of ₹9 crore.