25-ல் அன்னாபிஷேகம், பவுர்ணமி! பர்வதமலைக்கு செல்ல பிளானா? வனத்துறை தடை

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் பர்வதமலையில் பக்தர்கள் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் அன்னாபிஷேகமும் பவுர்ணமியும் வரும் நிலையில் இந்த தடை உத்தரவானது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதனால் வடதமிழகம், உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் பர்வதமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பர்வதமலையில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் அங்குள்ள பாறைகள் வழுக்கும் தன்மையில் இருக்கும். எனவே இந்த மழை காலத்தில் மலை ஏறினால் அது ஆபத்தில் முடியும் என்பதால் வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பவுர்ணமி. பொதுவாக பர்வதமலைக்கு பவுர்ணமி அன்று பக்தர்கள் செல்வது வழக்கம். அதிலும் இந்த பவுர்ணமியில் அன்னாபிஷேகம் வேறு வருகிறது. இதனால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென்மகாதேவமங்கலத்தை ஒட்டியுள்ளது பர்வதமலை. இது ஒரு மலை பகுதியாகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளை போன்றே பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலை என சொல்லப்படுகிறது.

    Advertisement
    Parvathamalai: கரடுமுரடான கடப்பாரை பாதை! பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    இந்த மலையின் மீது மல்லிகார்ஜுன சுவாமி கோயில் உள்ளது. இது சித்தர்களுக்கு பெயர் பெற்ற மலையாகும். இந்த மலை 2855 அடி உயரம். இது ஜவ்வாது மலையின் கிளை மலையாகும்.

    இதன் மொத்த பரபரப்பளவும் 22 சதுர கி.மீ. ஆகும். ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிறைய மர்மங்களும் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையின் கீழ் ஆதிவாசிகள் வாழ்வதாக சொல்கிறார்கள். ஆனால் அதுகுறித்து உண்மை தெரியவில்லை. மலையில் 3 குன்றுகள் உள்ளன. கோயில் அமைந்துள்ள பகுதியே மிகவும் உயரமான பகுதியாகும்.

    Advertisement

    ஜவ்வாது மலையில் சுற்றியுள்ள மூலிகை காற்றை சுவாசிக்க மக்கள் இந்த பர்வத மலைக்கு வந்து செல்கிறார்கள். இங்குள்ள கடப்பாரை பாறையை கடப்பதுதான் பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.

    English Summary

    Thiruvannamalai forest department bans to visit Parvathamalai as heavy rain lashes.