அகல் விளக்கு பதிப்பகம்.. திமுக ஆட்சியில் அரசாணை வழங்கப்பட்டதா? பரப்பப்படும் போலி தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இந்த புத்தகங்களை கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக போலியான புகைப்படங்கள் வெளியாகின்றன என்று திமுகவினர் விமர்சித்திருக்கின்றனர்.

நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் சிந்தை தளத்தில் விரிவாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் போலியான பதிப்பகத்தின் பெயரைக் கொண்டு.. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன என்று விமர்சித்திருந்தார்.

DMK

தான் 30 ஆண்டுகளாக இந்த தளத்தில் இயங்கி வருவதாகவும்.. ஆனால், இதுவரை 'அகல் விளக்கு' பதிப்பகத்தை கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். மட்டுமல்ல, அந்த பதிப்பகத்தின் பெயரில் வெளியான புத்தகங்களில் போலியான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் விமர்சித்து இருந்தார்.

அவரது குற்றச்சாட்டை தொடர்ந்து எழுத்தாளர்களும், அறிவு சார் துறையில் இயங்கி வருபவர்களும் இந்த பிரச்சனை குறித்து தொடர்ந்து பேச ஆரம்பித்தனர். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இப்படி இருக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் அதாவது.. திமுக ஆட்சியில் தான் 'அகல் விளக்கு' பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஆணை வெளியாகி இருந்தது என்று தவெக ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதற்கான ஆதாரமாக பொது நூலக இயக்ககம் ஆணை நகலை சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

அதில் 'அகல் விளக்கு' பதிப்பகம், 92 குடவாசல், எல்எப் சாலை என்று பெறுநர் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பொது நூலக இயக்ககம் நூல்கள் கொள்முதல்-கோயம்புத்தூரில் அமைய உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு-தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் தொடர்பாக ஆணை இது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த நகல் போலியானது என்று திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ட்விட்டரின் குரோக் ஏஐ-யிடம் இந்த ஆணையை பதிவேற்றம் செய்து கேட்ட போது.. ஆவணம் திருத்தப்பட்டது, போலியானது என்று அது கூறி இருக்கிறது.

அரசு ஆணைகளில் இருக்க வேண்டிய அரசு சின்னம், அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட், அதிகாரி கையொப்பம், அவருடைய பதவி, முத்திரை போன்ற எதுவும் இந்த அரசாணையில் இல்லை. எனவே எப்படி இதை அதிகாரப்பூர் அரசாணையாக ஏற்க முடியும்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+