போலி போராளிகள்.. பா ரஞ்சித்தை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா! ஆதாரத்தை தோண்டிய நெட்டிசன்கள்

  • சென்னை: ஆணவக் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பாரிஸ் காஃபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் சரன் இயக்கியுள்ள இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஸ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் காதல், ஜாதி மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டதாக உருவாக்கி உள்ளது.

    Advertisement

    இந்த படத்தின் பிரமோஷனின் போது பேசிய நடிகர் விஜய் விஷ்வா பா ரஞ்சித் பற்றி ஆரம்பத்தில் பெருமையாக பேசி இருந்தாலும் கடைசியில் போலி போராளிகள் என்று விமர்சித்து இருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த மேடையிலேயே கௌசல்யா அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் விஷ்வாவின் பழைய புகைப்படங்களை தோண்டி எடுத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    Advertisement

    நடிகர் விஜய் விஸ்வா பேச்சு

    அதாவது விஜய் விஷ்வா பேசும்போது, தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் பா. ரஞ்சித் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என்று ஆரம்பித்தார். அதற்கு பிறகு, அவர் சில விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார், ஆனால் கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவாகரத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை? அவர் மட்டுமல்ல யாருமே ட்விட்டரில் காணவில்லை. போலி போராளிகள் பாஸ்வேர்டு மறந்து விட்டார்களா? என்று விஜய் விஷ்வா கேள்வி எழுப்பினார்.

    போலி போராளி யார்?

    மேலும் எல்லா விஷயங்களுக்கும் குரல் கொடுங்கள் ஜாதியை கடந்து வந்து விட்டோம், அதிலேயே அடைப்பட்டு விடாதீர்கள் என்று கூறினார். அதோடு சில மாதங்களுக்கு முன்பு பா. ரஞ்சித் அண்ணனோட பேச்சை கேட்டேன். அதில் ராஜ்மோகன் தலித் என்பது அவர் அமைச்சர் ஆன சமயத்தில் தான் எங்களுக்கே தெரியும். தலித் மக்களுக்காக ராஜ்மோகன் குரல் கொடுக்கவில்லை என்று சொன்னாரு. ஆனால் அப்படி சொன்னவரு எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறாரா? என்றால் இல்லை என்பது தான் பதில் என விஜய் விஷ்வா பேசினார்.

    Advertisement

    சமூக ஆர்வலர் கௌசல்யா பேச்சு

    அவர் பேசிய விதம் விழாவில் இருந்த சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே மைக்கை பிடித்த சமூக ஆர்வலர் கௌசல்யா சங்கர், போலி போராளிகள் என்ற வார்த்தையை சொல்வதற்கு நீங்கள் சரியான நபரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நீங்கள் பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறினார் மேலும் அவர் பா ரஞ்சித்? எந்த விஷயத்துக்காக போராடுகிறார்களோ அந்த விஷயத்துக்காக தான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் அதற்காக எல்லா விஷயத்திற்கும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்.

    Advertisement

    தலித் அமைச்சர்கள் எதுவும் பண்ணலன்னு கேட்கிறாரே! பா ரஞ்சித் என்ன பண்ணுனாரு? கூல் சுரேஷ் ஆதங்கம்
    ஒரு பெண்ணாக எனது போராட்டங்கள் பலவற்றிருக்கும் தோழர்கள் துணையாக நிற்கிறார் என்றும் கௌசல்யா பேசினார். பாரிஸ் கஃபே போன்ற ஆணவக் கொலைகள் மற்றும் சமூக பிரச்சனைகளை பேசுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு படத்தின் மேடையிலேயே இப்படி ஒரு விவாதம் எழுந்திருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    விவாதம்

    அதே நேரத்தில் விஜய் விஷ்வா பா ரஞ்சித் விவாதம் ஒரு பக்கம் இருக்க, விஜய் விஷ்வா இதற்கு முன்பு அமைச்சர் ராஜ் மோகனை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அதை ஷேர் செய்யும் நெட்டிசன்கள் விஜய் விஷ்வா அரசியல் ரீதியாக பிரச்சனை ஏற்படுத்துவதற்காக தான் இதுபோல பா ரஞ்சித்தை விமர்சித்தாரா? என்று கேள்வி எழுப்பு வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் விஜய் விஸ்வாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    English Summary

    Actor Vijay Vishwa :The music launch of Paris Coffee, a film based on murders, was held in Chennai. Speaking during the promotion of this film, actor Vijay Vishwa Baa was initially proud of Ranjith but in the end criticized him as a fake militant. It is going viral on social media. Kausalya had retaliated against him on that stage. In this situation, netizens are digging and posting Vishwa's old photos.