இந்த நடிகரை ஞாபகம் இருக்கிறதா? மனைவியும் நடிகை.. மகனும் சினிமா பிரபலம் தான்

  • சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் கவனம் பெற்றவர் நடிகர் சிவராமன். இன்று அவருடைய பெயர் பலருக்கு உடனடியாக நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் 80ஸ்களில் அவரது முகம் பல திரைப்படங்களில் பரிட்சையமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக தூரல் நின்னு போச்சு, இணைந்த கைகள், காதல் பரிசு உட்பட 350-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

    Advertisement

    அந்த காலகட்டத்தில் காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர கேரக்டர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சிவராமன் இயக்குனர் பாக்கியராஜ் மூலம் உருவான நடிகர்களில் ஒருவர். சினிமாவில் பல வருஷங்களாக பயணித்த அவருடைய குடும்பமும் திரைத்துறையுடன் நெருக்கமாகவே இருந்திருக்கின்றன.

    Advertisement

    நடிகர் சிவராமன் குடும்பம்

    சிவராமனின் மனைவி சுப்புலட்சுமி தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார். இயக்குனர் விசு இயக்கிய சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி, அவள் கண்மணி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதனால் சிவராமன் குடும்பத்தில் வீட்டில் ஒருவர் மட்டும் சினிமாவில் இருந்தது இல்லை கணவன் மனைவி இருவருமே சினிமாதுறையில் தான் இருந்திருக்கிறார்கள்.

    மகனும் நடிகர்

    ஆனால் இவர்களுடைய மகன் சினிமாவுக்கு வந்த போது அப்பா அம்மாவின் பெயரை மட்டும் நம்பாமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா என்பது ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். ஆதேஷ் பாலாவில் சினிமா பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. 2017ல் அவர் அளித்த பேட்டியில் 80களில் பிரபலமாக இருந்த நடிகர் சிவராமனின் மகன் என்று அடையாளம் தனக்கு இருந்த போதிலும் வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.

    Advertisement

    நடிகர் ஆதேஷ் பாலா சினிமா பயணம்

    அதனால் என்னுடைய அப்பாவின் பெயரை மட்டும் பயன்படுத்தாமல் கிடைக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என்னுடைய நடிப்பை நிரூபிக்க முயன்று வருகிறேன் என்றும் சொல்லியிருந்தார். அப்பாவை போலவே ஆதேஷ் பாலாவும் பல படங்களில் குணச்சித்திரம், காமெடி போன்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார். முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக்கோட்டை, இங்கிலீஷ் காரன், குருவி, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    சீரியல்ல என்கூட நடிக்க முடியாதுன்னு ராதிகா சொல்லிட்டாங்க.. அதற்கு பிறகு நடந்த சம்பவம்.. நடிகர் சுப்பு பேட்டி
    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு சினிமாவோடு மட்டும் நின்றுவிடவில்லை குறும்படங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக டேக் ஒன் ஷாட் 1 போன்ற ஒரே ஷாட்டில் உருவான குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக குணச்சித்திர கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ஆதேஷ் பாலாவுக்கு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது.

    Advertisement

    தொடரும் முயற்சி

    அந்த ஆசைதான் ராஜமாபுரம் படத்தின் மூலம் நிறைவேறியது. சந்தோஷ் நவீன் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் ஆதேஷ் பாலா ஹீரோவாக நடித்திருந்தார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் குறும்படங்களில் நடிப்பதுடன் இயக்கத்திலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார். "அந்த இரவில்" என்ற குறும்படத்தில் ஒரே நபர் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் இயக்கியும் இருக்கிறார். சினிமாவில் வாரிசாக வருவது ஒரு கதவு திறக்க உதவலாம் ஆனால் அந்த கதவுக்குள் எத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கிறோம் என்பதுதான் உண்மையான போராட்டம். ஆதேஷ் பாலாவின் பயணம் அதற்கு ஒரு உதாரணம்.

    Advertisement

    English Summary

    Sivaraman: Actor Sivaraman was once a familiar face to fans of Tamil cinema, known for his roles in comedy and character parts. While his name might not immediately ring a bell for many today, his face was a common sight in numerous films during the 1980s. He appeared in over 350 movies, including notable titles such as *Thooral Ninnu Pochu*, *Inaindha Kaigal*, and *Kadhal Parisu*.