விவாகரத்தை அறிவித்த பிரபல இயக்குநர்.. அடுத்த நொடி மனைவி வெளியிட்ட பதிவு!

  • சென்னை: தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நீண்ட எமோஷனலான பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய மனைவியும் நடிகையுமான அஞ்சலியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். அதை நேரத்தில் அஞ்சலியும் தன்னுடைய பக்கத்தில் சோகமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

    Advertisement

    இயக்குனர் பிரபாகரன் வெளியிட்ட பதிவில், வாழ்க்கை நமக்கு பல அழகான அனுபவங்களையும் மறக்க முடியாத தருணங்களையும் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் சில முடிவுகள் நம் மனதுக்கு மிகவும் கடினமாக இருந்தாலும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். நீங்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் நான் மற்றும் அஞ்சலி (என் மனைவி) எங்கள் வாழ்க்கை பாதையை பிரிந்து விட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

    Advertisement

    இந்த முடிவு எளிதாக எடுக்கப்படவில்லை, நீண்ட யோசனை, புரிதல் மற்றும் நிறைய பிரார்த்தனைகளுக்கு பிறகு இந்த நிலைக்கு வந்துள்ளோம். இதில் யாருடைய தவறும் இல்லை. வாழ்க்கை பார்வை எதிர்பார்ப்பு மற்றும் புரிதல் வேறுபாடுகள் எங்களை இந்த முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். நல்ல நினைவுகளுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறோம்.

    இயக்குநர் பிரபாகரன் பதிவு

    எங்கள் மகன் அர்ஜுனுக்காக நாங்கள் எப்போதும் ஒருவராகவே இருப்போம். இந்த நேரத்தில் எங்களுக்கு உங்கள் புரிதலும் தனி உரிமை மிகவும் முக்கியம். தயவு செய்து இதை மதித்து எங்களுக்கு ஆதரவாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பிரபாகரன் தனது பதிவில் கூறி இருக்கிறார்.

    Advertisement

    அவர் இந்த பதிவு வெளியிட்டு சில மணி நேரங்களில் அவருடைய மனைவியும், நடிகையுமான அஞ்சலி பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "நம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் முயற்சி இருக்க வேண்டும். எப்போதும் உன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் அல்ல" என்ற அர்த்தம் கொண்ட ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார். இது பிரபாகரனின் அறிவுப்புடன் தொடர்புடையதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    விவாகரத்தை அறிவித்த இயக்குநர்

    இருவரும் தங்களுடைய திருமணப் புகைப்படங்கள் மற்றும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் என எதையுமே சோசியல் மீடியா பக்கங்களில் டெலிட் செய்யவில்லை. அது எல்லாமே அப்படியே இருக்கும் சமயத்தில் தாங்கள் இருவரும் தங்களுடைய குழந்தைக்காக எப்போதும் ஒன்றாகவே இருப்போம் என்று கூறி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் எந்த குறையும் சொல்லவில்லை.

    Advertisement

    ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து

    ஏற்கனவே இதுபோல ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்திருந்தனர். தங்களுடைய குழந்தை விருப்பப்பட்ட நேரத்தில் அவருடைய அப்பாவை போய் சந்தித்து விட்டு வருவார் என்று சைந்தவி சொல்லி இருந்தார். அதேபோல ஜிவி பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்திற்கு பிறகும் கூட பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள். அதனால் அதே வழியை இவர்கள் பின்பற்ற போகிறார்களா என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

    இயக்குனர் பிரபாகரன் குறும்படங்கள் மற்றும் ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்றவர். பிறகு திரைப்பட இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தனது பயணத்தை தொடர்ந்தார். சோசியல் மீடியாவிலும் தனது கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து வந்ததால் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    அதுபோல அஞ்சலி பிரபாகரன் தமிழ் சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பு மற்றும் குடும்பம் என இரண்டிலும் சரிசமமாக கவனத்தை செலுத்தி வருவதாகவும் திருமணத்துக்கு பிறகும் தான் நடித்து வருவதாகவும் ஏற்கனவே வீடியோக்களிலும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களிலும் பகிர்ந்து இருக்கிறார்.

    அஞ்சலி படத்தில் தேசிய விருது வாங்கிய ஷாமிலி... நடிகர் அஜித்தின் கொழுந்தியாள் இப்போ என்ன பண்ணுறாங்க தெரியுமா?
    இந்த நிலையில் இவர்களுடைய விவாகரத்து செய்தி அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இருவரும் மிகவும் அதிர்ச்சியான முறையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்றும் பாராட்டி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இவ்வளவு அழகாக, அன்பாக இருந்த ஜோடிக்கு என்ன நடந்தது? என்று கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

    English Summary

    director Prabhakaran: Prabhakaran, who is one of the young directors to watch in the Tamil film industry, posted a long emotional post on his Instagram page which is going viral on social media. In it, he has announced that he is divorcing his wife and actress Anjali. At that time, Anjali also posted a sad post on her page.