பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஒருவனாடப் பணயம் - வேறே ஒருவன் வைப்ப துண்டோ?
தரும மாகு மோடா! - சொல்வாய் தம்பி இந்த வார்த்தை?
வரும மில்லை ஐயா - இங்கு மாம னாடப்பணயம்
மருமகன் வைக் கொணாதோ?இதிலே வந்த குற்ற மேதோ? (186)
பொழதுபோக்கு தற்கே - சூதுப் போர் தொடங்கு கின்றோம்
அமுத லேனிதற்கே? - என்றே அங்கர் கோன் நகைத்தான்
பழு திருப்பதெல்லாம் - இங்கே பார்த்திவர்க் குரைத்தேன்
முழுது மிங் கிதற்கே - பின்னர் முடிவு காண்பீர் என்றான். (187)
ஒளி சிறந்த மணியின் - மாலை ஒன்றை அங்கு வைத்தான்
களி மிகுந்த பகைவன் - எதிரே கன தனங்கள் சொன்னான்:
விழி இமைக்கு முன்னே - மாமன் வென்று தீர்த்து விட்டான்:
பழி இல்லாத தருமன் -பின்னும் பந்தயங்கள் சொல்வான் (188)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications