பாரதி பக்கம்
"யூ செட் இட்..." இந்-த வாக்-கி-யத்--தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா...?
காலையில் டைம்ஸ் ஆப் இந்தியா படிக்கும் எல்லோருக்கும் பரிச்சயமானது இந்தவாக்கியம். ஆர்.கே.லட்சுமணின் கார்ட்டூன் காலத்தின் தலைப்புதான் இது.
சங்கருக்குப் பிறகு கார்ட்டூன்களில் கொடி கட்டிப் பறப்பவர் ஆர்.கே.லட்சுமண்.நறுக்கென நடுத் தலையில் கொட்டியது போல தனது கார்ட்டூன்களில் ஒரு பன்ச்வைத்திருப்பார். இவரது கைகளில் சிக்கி அதிகம் அவதிப்படுவதுஅரசியல்வாதி-கல்தான்.
சராசரி மனிதனின் உணர்வுகளை தனது கேலிச் சித்திரங்களில் கொட்டியிருப்பார்.அரசியல் கோமாளித்தனங்கள், சமூகத்தின் குளறுபடிகள் என இவரது கார்ட்டூன்களின்களங்கள் வேறுபட்டாலும் கூட, கருத்து என்னவோ, குற்றங்களைச் சுட்டிக் காட்டுவதே.
"அரசியல்வாதிகளையும், தலைவர்களையும் நான் சரமாரியாக விமர்சிப்பதால்,மக்களுக்கு எனது கார்ட்டூன்களைப் பிடிக்கும் என்கிறார் புன்னகையுடன்ஆர்.கே.லட்சுமண்.
"மக்கள் சொல்ல நினைப்பதை எனது கார்ட்டூன்கள் சொல்லும். அவர்களின் உள்ளக்குமுறல்கள், புகார்கள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள், மகிழ்ச்சி...இப்படி பலஉணர்வுகளையும் எனது கேலிச் சித்திரத்தில் நான் கோடிட்டு காட்டிவிடுகிறேன்.இதுவும் கூட மக்கள் என்னை விரும்புவதற்கு ஒரு காரணம் என்கிறார்லட்சுமண்.
"இப்போதைய காலம் கார்ட்டூன்காரர்களுக்குப் பொற்காலம். எங்கே பார்த்தாலும்குழப்பங்கள், முட்டாள்தனங்கள், அநியாயங்கள், அவதூறுகள். சாதாரணகார்ட்டூனிஸ்ட் கூட இதை வைத்துப் படம் போட்டால் மிகப் பெரிய கார்ட்டூனிஸ்டாகிவிடுவார் என்று சிரிக்கிறார் லட்சுமண்.
இந்தியர்களுக்கு சிரிப்புணர்ச்சி கொஞ்சம் கம்மி என்கிறார்களே என்றால், யார்சொன்னது..? வெள்ளைக்காரன் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகளில் இதுவும்ஒன்று. நம்மளோட சிரிப்பை புரிந்து கொள்ளாதவர்கள் கூறும் அபத்தமான புகார் இதுஎன்கிறார் கொஞ்சம் கோபத்துடன்.
இந்தியாவில் கார்ட்டூன் கலை எப்படி உள்ளது என்று கேட்டால், அதுகுறித்துக் கருத்துக்கூற எனக்கு உரிமையில்லை. இந்திய கார்ட்டூனை விமர்சிக்கவும் நான்விரும்பவில்லை. எதற்குப் பிரச்சினை..என்று நழுவுகிறார்.
காலையில் பேப்பர் படிக்கும் ஒவ்வொரு மனிதனும் எனது கார்ட்டூனைப் பார்த்துச்சிரிக்க வேண்டும். அப்படியே கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டும். மனுசனா இருந்தாசிரிக்கத் தெரிய வேண்டும். எனது லட்சியமே, எல்லோரையும் சிரிக்க வைப்பதுதான்என்கிறார் லட்சுமண்.
எனது நேரத்தை நான் எப்போதுமே வீணடிப்பதில்லை. அதிகம் வெளியில் அலைந்துநேரத்தைக் கழிக்கவும் விரும்புவதில்லை. பெரும்பாலும் தனித்தே இருக்கவிரும்புகிறேன். அப்போதும் கூட நான் தனியாக இருப்பதில்லை. அரசியலும்,அரசியல்வாதிகளும் பேய் மாதிரி என்னைச் சுற்றிக் கொண்டேதான் இருப்பார்கள்என்கிறார் சிரிப்புடன்.
நகைச்சுவையாக சிந்திக்க வேண்டுமென்றால், உணர்வுகளிலும் சிரிப்பு இருக்கவேண்டும். ஆர்.கே.லட்சுமண் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் நிர்பந்திக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications