பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 01, 2001
வசன கவிதை
6.
தெய்வங்கள் இன்ப மெய்துக.
அவை வாழ்க.
அவை வெல்க.
தெய்வங்களே!
என்றும் விளங்குவீர் என்றும் இன்பமெய்துவீர்:
என்றும் வாழ்வீர்: என்றும் அருள் புரிவீர்.
எவற்றையும் காப்பீர்.
உமக்கு நன்று.
தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர்,
உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உண வாவீர்,
உமக்கு நன்று.
தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப் படுதலும் இனிது.
அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று
சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
