பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 04, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
3.
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க,
உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
அவள் திரு,
அவள் விழிப்பு தருகின்றாள், தெளிவு தருகின்றாள்,
உ.யிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள்.
அவள் வாழ்க.
அவள் தேன், சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
அவள் அமுதம்.
அவள் இறப்ப தில்லை. வலிமையுடன் கலக்கின்றாள்.
வலிமைதான் அழகுடன் கலக்கும், இனிமை மிகவும் பெரிது,.
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புகள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள். அன்பு மிகுதியால்
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
