பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் 07, 2001

Subramaniya Bharathi

தேச முத்துமாரி -2

தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய். (1)

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாங் களைவாய்:
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந் தீர்ப்பாய். (2)

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி:
ஒப்பி.யுன தேவல்செய்வேன் உனதருளில் வாழ்வேன். (3)

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும். (4)

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்:
யாதானுந் தொழில் புரிவோம்: யாதுமவள் தொழிலாம். (5)

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்:
இன்பமே வேண்டி நிற்போம்: யாவுமவள் தருவாள். (6)

நம்பினார் கெடு வதில்லை: நான்கு மறைத் தீர்ப்பு!
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம். (7)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+