பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் 10, 2001

Subramaniya Bharathi

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

(நொண்டி சிந்து)

5. சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ் வார்:
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்:
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)


6. நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே:
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் -நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)


7. எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலியைமயிலார்
கண்ணிலார் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்:
நாலாயிரங் கோடி நயந்து நின்ற,
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியுற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+