பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 15, 2001
15.
நீ கண்கண்ட தெய்வம்.
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன.
உயிரே,
நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்,.
தோன்றும் பொருள்களில்ன் தோற்ற நெறி நீ.
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்.
பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு,
இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உ.யிர்கள், எண்ணற்ற
உலகங்களிலுள்ள எண்ணெயில்லாத உயிர்த் தொகைகள்-
இவையெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம்.
காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில்
லட்சக்கணக்கான சிறியஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து, அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்,
அவற்றுள் அவற்றினுஞ் சிறிய பல ஜந்துக்கள்.
அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ்வையகம் முழுதிலும்
உயிர்களைப் பொதித்து வைத்திருக்கிறது.
மஹத் - அதனிலும் பெரிய மஹத் - அதனினும் சிறிது - அதனிலும் சிறிது-
இரு வழியிலும் முடிவில்லை: இரு புறத்திலும் அநந்தம்.
புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம்
போற்றுவோம்.
நமஸ்தே, வாயோ, த்வமேவ ப்ரத்யட்சம் ப்ரஹமாஸி.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
