பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 16, 2001
4. கடல்
1
விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும்
கடல் -நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து
திசைவெளியில் ஏன் சிதறிப்போய்விடவிலல்லை?
பராசக்தியின் ஆணை.
அவள் நமது தலைமீது கடல் கவிழ்ந்து விடாதபடி
ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க.
கடல் பெரிய ஏரி: விசாலமான குளம்: பெரும் கிணறு.
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
அதுபற்றியே கடலும் கவிழவில்லை.
பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது.
மலை நமது தலைமேலே புரளவில்லை.
ஊர்கள் கலைந்து போகவில்லை.
உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்
அவள் திருவருளை வாழத்துகின்றோம்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
