பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 31, 2001
( தொடர்ச்சி)
ஆஹா! அந்த ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து
வெளிப்பட்டு என் முனனே நின்ற தேவனுடைய மஹிமையை
என்னவென்று சொல்வேன்!
காற்றுத் தேவன் தோன்றினான்.
அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன்.
வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது.
நமஸ்தே வாயோ, த்வமேல ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாசி.
காற்றே போற்றி. நீயே கண்கண்ட ப்ரம்மம்.
அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுவதும் பராண சக்தி
நிரம்பித் கனல்வீசிக்கொண்டிருந்தது.
ஆயிரமுறை அஞ்சலி செய்து வணங்கினேன்.
(தொடரும்)
DVD


Click it and Unblock the Notifications
