Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனித்தன்மை...

Subscribe to Oneindia Tamil

"நீ ரசித்த ஒன்றை மற்றவர் ரசிக்கவில்லையெனில்,அவன் ரசனையற்றவன் என்று பொருளல்ல,அவன் ரசித்த ஏதோஒன்று உன் ரசனைக்கு உட்பட்டதாக இல்லை என்றே பொருளாகும்"

மனித இனமாகிய நமக்குமட்டுமே ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.இந்தபகுத்தறிவைக் கொண்டே ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மையும் அமைகிறது.இத்தகைய தனித்தன்மையானதுமனிதனின் ஆக்க சக்தியாக விளங்கும் அதே நேரத்தில் அழிக்கும் சக்தியாகவும் விளங்குகிறது.இந்ததனித்தன்மையைக் கொண்டே ஒவ்வொரு மனிதனின் ரசனைகளும்,செயல்களும்,விருப்பங்களும் அமைகின்றன.

Peopleஇவ்வுலகில் ஒரே மாதிரியாக ஏழு பேர் உண்டு என்ற கூற்று உண்டு. ஆனால் அந்த ஏழு பேரில் ஒருவர்ஆன்மீகவாதியாக இருக்கலாம், மற்றொருவர் தீவிரவாதியாக இருக்கலாம். இவையாவும்,அந்தந்த நபரின்தனித்தன்மையைப் பொருத்ததே.

ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் தனித்தன்மை உண்டு.இவ்வாறாக வெவ்வேறுதனித்தன்மையைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் இணைகையில்,ஒரு மனிதனின் தனித்தன்மையை மற்றவர்அழிக்க நினைக்கும் பொழுதோ அல்லது ஒருவர் மற்றவர் மீது தனது தனித்தன்மையை திணிக்க முயலும் பொழுதுகருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் உருவாகின்றன.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை நோக்கும் கோணங்கள் வெவ்வேறு. ஒருவருக்கு சரி என்பது மற்றவர்கட்குதவறாக தோணும்.மனிதனான ஒவ்வொரும் மற்றவரின் சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் மதித்தாலே பலபிரச்சனைகளும் சுமூகமாக முடியும்.

அதேப்போல், மனிதனின் தனித்தன்மையைப் பொருத்தே இவ்வுலகில் பல கண்டுபிடிப்புகளும், சாதனைகளும்படைக்கப்பட்டுள்ளன.

குடும்பமாகிலும் சரி, நண்பர்கள் வட்டமாகினும் சரி மற்றவரின் தனித்தன்மையை உதாசீனப்படுத்துகையில்அம்மனிதன் விலகிப் போகத் தொடங்குவான். ஒவ்வொரு மனிதனும் அவன் தன் தனித்தன்மையை இழக்கும்பொழுது தன் பகுத்தறிவை இழந்து மிருக நிலைதனை அடைந்து பின் அணுஅணுவாக தன்னை இழக்கிறான்.

வாழ்க்கை பனித்துளி போன்றது. வெப்பத்தை அதிகமாகி அதன் ஆயுட்காலத்தை குறைக்க வேண்டாம்.மற்றவரின்சுதந்திரத்திற்கும், தனித்தன்மைக்கும் தீங்கு விளைவிக்காது நம்மில் உள்ள தனித்தன்மையைக் கொண்டு நம்திறமையை உபயோகித்து வெற்றி படிதனில் முன்னேறுவோம்.

பி.கு: இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அதுவே உங்கள் தனித்தன்மை!!!!

- அனுகாஷ், சிங்கை([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+