Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி எதிர்ப்பு - எத்தகைய வீழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

Nedumaranபுற்றில் பதுங்கி இருக்கும் பாம்பு மெதுவாகத் தலைநீட்டுவதும், யாரேனும் கம்பை எடுத்தால் மறுபடியும் பதுங்கிக் கொள்வதையும் போலத்தமிழ்நாட்டில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தி தலையை நீட்டுவதும் எதிர்ப்புக் கிளம்பினால் பின்வாங்கிக் கொள்வதும்காலங்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அவலமாகும்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்களான மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தரபாரதியார், கா.சுப்ரமணியனார் போன்றவர்களும் அரசியல் தலைவர்களான பெரியார் ஈ.வே.இராமசாமி, அறிஞர் அண்ணா, அண்ணல்தங்கோ, செ. நெ. நாயகம் போன்றவர்களும் இணைந்து போராடினர். அதன் காரணமாகத் தமிழ் உணர்வு பீறிட்டுக் கிளம்பியது.

""தமிழ்நிாடு தமிழருக்கே என்ற முழக்கம் எழுந்தது. இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் பின்வாங்கினர்.1965ஆம் ஆண்டில் இந்திக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாணவர் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் காவலராலும்,படையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் களின் எண்ணிக்கை ஏராளம் ஆகும். தமிழ் காக்கத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துகொண்டவர்கள் பலர் ஆவர்.

தமிழர்களின் இந்த உன்னதத் தியாகத்தின் விளைவாக இந்தித் திணிப்பு நீங்கி விடவில்லை. ""இந்தி பேசாத மக்கள் விரும்பும் காலம் வரைஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என நேரு அளித்த வாக்குறுதியை மீண்டும் உறுதி செய்தது மத்திய அரசு.

இதுவே பெரிய வெற்றியாகக் கொண்டாடப் பட்டது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இராஜாஜி ""இந்தி ஒரு போதும் இல்லை,என்றென்றும் ஆங்கிலமே என்ற முழக்கத்தை முன்வைத்தார். தமிழ்நாட்டில் முதன்முதலாக இந்தியைத் திணித்தவர் இவரேதான் என்பதைமறந்து இவர் வாக்கை அப்படியே ஏற்றுக் கொண்டது தமிழ்த் தலைவர்கள் சிலர் செய்த மாபெரும் தவறாகும்.

சமசுகிருத மொழியை முன்னிறுத்தித் தமிழை அழிக்கப் பல ஆயிரம் ஆண்டுகாலமாக முயற்சி செய்த கும்பல் அம்முயற்சியில்வெற்றிபெற முடியாமல் போனதால் ஆங்கிலத்தைப் பயன்படுத்தித் தமிழை அழிக்க விரிக்கப்பட்ட வஞ்சகவலையே இராஜாஜியின்முழக்கமாகும். இதன் விளைவாக ஆங்கில மோகம் பெருகி தமிழ்வழிக்கல்விக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தமிழைக் காக்க இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்பட்டது. ""எங்கும் எதிலும் தமிழ் என முழங்கியவர்கள் ஆட்சியில் எல்லாஇடங்களிலும் ஆங்கிலம் அரசோச்ச வழி வகுத்தார்கள். தமிழால் அரியணை ஏறியவர்கள் தமிழை அரியணையேற்றத் தவறினார்கள்.

1971ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் மத்தியில் உள்ள ஆளும் கட்சியுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்துதான்போட்டியிட்டு வருகின்றன. இக்கட்சிகளின் துணையுடன் தான் மத்திய ஆட்சிகள் இயங்கின. சில வேளைகளில் திராவிடக் கட்சிகளின்பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்களாகவும் அரசோச்சினார்கள். இப்போது 12 தமிழர்கள் மத்திய அமைச்சர்களாகவும் உள்ளனர்.

ஆனாலும் இந்தித் திணிப்பைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கும் துறைகளில் கூட இந்தி முழுமையாகஅரசோச்சுவதற்கு இவர்கள் துணையாக நின்றார்கள், நிற்கிறார்கள்.

தொடர்வண்டி நிலையப் பெயர் பலகைகளில் இருந்த இந்திப் பெயர்களைத் தார்கொண்டு அழித்த காலம் போய் இன்று நெடுஞ்சாலைகற்களிலும் பெயர்ப் பலகைகளிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தும் காலம் வந்துவிட்டது.

பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் பயணம் செய்கிறார்கள். எனவே இந்தியில் பெயர்கள் இல்லாவிட்டால் அவர்கள் தவித்துப் போய்விடுவார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் தமிழர்களுக்காக அங்கு பெயர்ப் பலகைகள்தமிழில் வைக்கப்படுமா? ஒரு போதும் இல்லை. உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெயர்களும் எண்களும்கூட தேவநாகரிஎழுத்துக்களில் மட்டுமே எழுதப்படுகின்றன.ஆனால் தமிழ்நாட்டில் இந்தியில் மட்டும் எழுதப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன் தமிழும் இடம்பெறும் எனஅறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தி நீக்கப்படாது. இந்தி நீடிக்கும். போனால் போகிறது என்று தமிழும் இடம் பெறுமாம்.

""எப்பக்கம் வந்து புகுந்துவிடும் -இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டி வரும்

என்ற பாவேந்தரின் பாடலை மேடைதோறும் முழங்கியவர்கள் இன்று தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களை இந்தியில் எழுத அனுமதித்துவிட்டுஅதற்குக் கீழே தமிழில் எழுதுவதையே பெருந்தமிழ்த் தொண்டாகக் கருதுகிறார்கள்.

அடடா! எத்தகைய வீழ்ச்சி! சரிவு!

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்
2. சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்
3. மக்களிடம் மன்னிப்புக் கேட்கட்டும்
4. பாதுகாப்பு உடன்பாடு - இந்தியா மறுப்பு


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+