திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழகத்தில் பிரசத்திப் பெற்ற தீபத் திருவிழா திருவண்ணாமலை தீபத் திருவிழா.
இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, பஞ்சமூர்த்திகள், வெள்ளி விமானங்களில் மாடவீதியை வலம் வந்தனர்.
7ம் தேதி வெள்ளித் தேர் பவனியும், 8ம் தேதி மகாரதம் தேரோட்டமும் நடைபெறும். 9ம் தேதி மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீப திருவிழா 11ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலையே 2,688 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இதைக்காண பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications