துபாயில் 'உணர்வாய் உன்னை' தன்னம்பிக்கை நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அல் கூஸ் பகுதியில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியினை 20.03.2008 வியாழக்கிழமை காலை எட்டு மணி முதல் துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளை ஏற்பாடு செய்துள்ளது.

சமீபகாலமாக துபாயில் தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வின் காரணமாகவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உரிய ஆலோசனை பெற இயலாத சூழ்நிலையினைப் போக்க இத்தகைய தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

இனிமையான இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 3851929 / 055 9761677 / 050 7640972 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மீலாத் பேச்சுப் போட்டி: பெண்கள் சிறப்பிடம்

இதற்கிடையே துபாய் ஈமான் நடத்திய மீலாத் பேச்சுப் போட்டியில் பெண்கள் சிறப்பிடம் பெற்றனர்.

துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழாவினையொட்டி பேச்சுப் போட்டியினை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்தி வருகிறது.

இவ்வாண்டுக்கான மீலாத் பேச்சுப்போட்டி கடந்த 14.03.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

துவக்கமாக இலங்கை புஷ்ரா மாத இதழ் ஆசிரியர் ஏ.எல். பதுறுத்தீன் ஷர்க்கி இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார்.

நடுவர்களாக அய்மான் சங்க தலைவரும், கீழக்கரை டவுண் காஜியுமான அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கீ, அமீரக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துல் ஹமீது பாகவி, காயல் மௌலவி ஹாபிழ் எம்.ஏ. ஹபிப் ரஹ்மான் ஆலிம் ஆகியோர் இருந்தனர்.

பொதுமக்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் மூன்று பரிசுகளையும் பெண்கள் தட்டிச்சென்றனர்.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் வழங்கும் துபாய் - சென்னை - துபாய் விமானச்சீட்டினை பாத்திமா ஹலீமாவும், இரண்டாம் பரிசினை ரஷாதி ஹஜ் சர்வீஸ் வழங்கும் இலவச உமரா பயண வாய்ப்பை செய்யது ரிழ்வானாவும், மூன்றாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் 500 திர்ஹத்திற்கான பரிசுக் கூப்பனை கதீஜா நஸ்ரியாவும் பெற்றனர்.

மேலும் லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் அப்துல் வாஹிதுக்கும், அல்ஹஸீனா வழங்கும் 200 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பன்களை ஹபிப் பாத்திமா, முத்து பீவி பாத்திமா, பாயிஸா ரஹ்மான், கிருஷ்ணமூர்த்தி, முஹியித்தீன், மஷ்ரிக் இண்டர்னேஷனல் வழங்கும் ஜெனார்ட் வாட்சினை ஜஸீலா ரியாஸ், முஹம்மது ரஸீம், ஜஹ்பர் சாதிக், ஹஸீனா அன்சாரி, இராஜவேல் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கான போட்டியில் பரிசு பெற்றனர்.

ஆலிம்களுக்காக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் துபாய் சென்னை துபாய் விமானச்சீட்டு மௌலவி முஹம்மது ரபீக் பிலாலியும், இரண்டாம் பரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் வழங்கிய 500 திர்ஹம் பரிசுக் கூப்பனை மௌலவி ஹுசைன் மக்கியும் மூன்றாம் பரிசான அல்ஹஸீனா ஜுவல்லர்சின் 200 திர்ஹம் பரிசுக்கூப்பனை சர்புதீன் ஆலிமும் பெற்றனர்.

மாணவ, மாணவியருக்கான, இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் 500 திர்ஹத்துக்கான பரிசுக் கூப்பனை ரஃபீகா சாலிஹ், லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் 4 கிராம் தங்க நாணயம் சித்தி ரஃபீகாவுக்கும், அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் 200 திர்ஹம் பரிசுக் கூப்பன் ஹஸீனா காத்தூன், வஸ்பி ஸஜ்ஜாத் இம்தியாஸ், ரஷீதா இப்றாஹிம், காதிரி ஸலீம், சில்மியா ஹபிப் ரஹ்மான், ஷமீஹா பர்வீன் உள்ளிட்டவர்களும் பரிசு பெற்றனர்.

நிகழ்ச்சியினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் அப்துல் கத்தீம், அஹமது முஹைதீன், கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின், இஸ்மாயில் ஹாஜியார், காயல் ஷேக் முஹம்மது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+