பத்திரிகை தின பேச்சு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள்
தேசிய பத்திரிகை தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பரிசுகள் வழங்கினார்.
மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட தினம் ஒவ்வொரு வருடமும் தேசிய பத்திரிகை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பத்திரிகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 'ஊடகம் மக்களின் குரலாக சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும்' என்ற தலைப்பில் இந்தப் போட்டிகள் நடந்தன.
கல்லூரி கல்வி இயக்கத்தின் மூலம் முதலில் மாவட்ட அளவிலும் பின்னர் மாநில அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடந்தன.
மாநில அளவில் மற்றும் சென்னை மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற கீழ்க்கண்ட கல்லூரி மாணவ, மாணவியருக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை தலைமைச் செயலகத்தில் இரு தினங்களுக்கு முன் பரிசுகளை வழங்கினார்.
வெற்றிப் பெற்றவர்கள் விவரம்:
தமிழ் பேச்சுப்போட்டி:
முதல் பரிசு எஸ்.கௌசல்யா, மாநிலக் கல்லூரி, சென்னை.
2ம் பரிசு ச.ராஜ்முகமது, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.
3ம் பரிசு முகமது ரிஸ்வி, சையது அகமது அறிவியல் கலைக்கல்லூரி கீழக்கரை.
ஆங்கிலப் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு கே.ராமச்சந்திரன், ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி.
2ம் பரிசு ஏ.சசிகுமார், மாநிலக் கல்லூரி, சென்னை.
3ம் பரிசு சுரேஷ்குமார், திருவள்ளுவர் அறிவியல் கலைக் கல்லூரி, கடலூர்.
சென்னை மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்கள்:
தமிழ் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு எஸ்.கௌசல்யா, மாநிலக் கல்லூரி சென்னை.
2ம் பரிசு அ.ப.ராசா, ஊடகவியல்துறை, சென்னை பல்கலைக்கழகம்.
3ம் பரிசு சித்திக் ஜீனத் நிஷா, தமிழ் இலக்கியத்துறை, சென்னை பல்கலைக்கழகம்
ஆங்கிலப் பேச்சுப் போட்டி:
முதல் பரிசு ஏ.சசிகுமார், மாநிலக் கல்லூரி, சென்னை
2ம் பரிசு எஸ்.சதீஷ், குருநானக் கல்லூரி, சென்னை
3ம் பரிசு செல்வி ஏ.அமலஜோதி, ராணி மேரிக் கல்லூரி, சென்னை.
(பத்திரிகை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications