தமிழகத்தில் பிரபலமாகும் கேரளாவின் சிங்காரி மேளம்
மதுரை: கேரளாவில் புகழ் பெற்ற சிங்காரி மேளம் தமிழகத்தில் தற்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெருமை இருக்கும். கலைகளிலும், கலாச்சாரங்களிலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம், தனிப்பெருமை இருக்கும். அந்த வகையில் கேரளாவில் புகழ் பெற்ற கலைகளில் ஒன்றான சிங்காரி மேளமும் அங்கு பிரபலமானது.
தமிழகத்தில் உள்ள முக்கிய திருமண விழாக்கள், காது குத்து நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி, கோவில் விழாக்கள் என பல முக்கிய விழாக்களில் சிங்காரி மேளம் வாசிக்கப்படுகிறது.
பெரும் பாலும் தமிழக மேளத்தில் காதுக்கு இனிமையான இசை மட்டுமே வாசித்து வந்தனர். ஆனால் இந்த சிங்காரி மேளத்தை 26 பேர் கொண்ட குழுவினர் இணைந்து வாசிக்கின்றனர்.
இதில் நான்கு பேர் கொம்பு ஊதுகின்றனர். மற்றவர்கள் ஆடியபடி சிங்காரி மேளத்தை இசைக்கின்றனர்.
காதுக்கு இனிமையாகவும், பார்ப்போரை பரவசம் அடையும் விதத்திலும் ஆடல் பாடலுடன் இந்த மேளம் வாசிக்கப்படுவதால் பலரும் விரும்பி அழைத்து வந்து இசைக்க வைக்கின்றனர் .
ஆனால் இந்த மேளத்திற்கு செலவு செய்யும் தொகை மிக அதிகம் என்பதால் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இல்ல விழாக்களில் மட்டுமே தற்போது பிரபலமடைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications