பள்ளி விழாவில் ஜெயேந்திரர்
சென்னை திருவான்மியூர் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் துவக்கின.
நிகழ்ச்சியில் அருளாசி வழங்கிய ஸ்ரீ ஜெயேந்திரர், மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் பல்வேறு உதவித் தொகை, ஊக்கப் பரிசு மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கி ஊக்குவிப்பதைப் பாராட்டினார்.
அவர் பேசுகையில், வெறும் பாடங்களை மற்றும் கற்றுத் தராமல், ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்றுத் தருவது தான் ஒரு கல்வி நிலையத்தின் தலையாய கடமை. அந்த வகையில் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக ஆற்றிவரும் சேவை மகத்தானது.
எந்த வித நன்கொடையையும் வசூலிக்காமல், மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்த்துக் கொள்வது போதாதென்று, இத்தனை குழந்தைகளுக்கு உதவித் தொகை, ஊக்கத் தொகை, இலவச சீருடை என்று வழங்கி வருகிறது இந்தப் பள்ளி என்பது பாராட்டுக்குரிய விஷயம். காலாகாலத்துக்கும் அழியாத தலைசிறந்த கல்விச்சாலையாக இந்தப் பள்ளிக் கூடம் பல நூற்றாண்டு விழாக்களைக் காண வேண்டும் என்றார்.
வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,
மாணவர்களே, நீங்கள் படிப்பது ஆங்கில வழிப்பாடம் புகட்டும் மெட்ரிகுலேஷன் பள்ளியாக இருக்கலாம். ஆனால், தமிழ்த்திருநாடு தன்னை பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா; அமிழ்தினும் இனியதடி பாப்பா, நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா...' என்று மகாகவி பாரதி சொன்ன வரிகளை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். தேம துரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யுஙகள்' என்றார்.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என். வள்ளிநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் ரமாபிரியா நன்றி கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications