கலைவாணர் நூற்றாண்டு விழா: ஜேப்பியார் தலைமையில் கமிட்டி
சென்னை: சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை நகைச்சுவையாக திரைப்படங்களில் வழங்கிய என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பலர் இக்குழுவின் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் ஜேப்பியார் தெரிவித்ததாவது:
என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. அவரது கலைச் சேவை, நகைச்சுவைத் திறன், சமூக சிந்தனையைப் போற்றும் வகையிலும் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
என்.எஸ்.கே. மருமகனும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் முன்னாள் இயக்குநருமான வரதராஜன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
என்.எஸ்.கே. நூற்றாண்டை ஒட்டி நவம்பர் மாதம் கலை விழா, நகைச்சுவைக் கவியரங்கம், கலைவாணர் பட்டி தொட்டி எங்கும் நிகழ்த்திய வில்லுப்பாட்டு ஆகியவை இந்த விழாவில் இடம்பெறும். விழாவில் முன்னணிக் கலைஞர்கள், பிரமுகர்கள் பங்கேற்பர் என்றார் ஜேப்பியார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications